அசத்தலான துப்பறிவாளன் டீசர்

IMG_2503

விஷால் ஃ பிலிம்  பேக்டரி தயாரிப்பில் விஷால் , பிரசன்னா, சிம்ரன் , தலைவாசல் விஜய் ஆகியோர் நடிக்க , மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில்,

சுசீந்திரன், பாண்டி ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் .

நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட டீசர் அற்புதமாக இருந்தது . மிஸ்கினுக்கு மட்டும் எங்கிருந்துதான் கேமரா கோணங்கள் கிடைக்குமோ என்ற அதே சுவையான கேள்வி மனசுக்குள் தோன்றியது .

கார்த்திக்கின் அற்புத ஒளிப்பதிவு , அருள் கரோலியின் சிறப்பான இசை , கலை இயக்கம் , விஷாலில் தெறிப்பான ஆக்ஷன் நடிப்பு என்று எல்லாமே அசத்தல் .

IMG_1755

நிகழ்ச்சியில் பேசிய சுசீந்திரன் பாண்டிராஜ் , திரு போன்ற இயக்குனர்களும் அதையே சொன்னார்கள் .

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் மெட்ராஸ் எண்டர்டெயின்மென்ட் நந்தகோபால் , ” விஷால் ஒரு நாள் ஷூட்டிங் வந்தால் அவருக்கு சம்பளம் பனிரெண்டு லட்ச ரூபாய் .

அதை விட்டு விட்டுதான் அவர் சங்கப் பணிகளில் நல்ல எண்ணத்தோடு ஈடுபடுகிறார் ” என்றார் .

நிகழ்ச்சியில் பேசிய மிஸ்கின் ” இதுவரை நான் இயக்கிய நடிகர்களிலேயே எனக்கு அதிக ஒத்துழைப்பு கொடுத்த நாயகன் விஷால் தான் .

IMG_0547

இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டார் . பலமுறை அடிபட்டு ரத்தம் கொட்டியது . மிக சிறப்பான நடித்தும் உள்ளார் . 

அது மட்டுமல்ல .. இவ்வளவு பெரிய ஹீரோ வாடா போடா என்று அழைக்கிற உரிமையை எனக்கு கொடுத்துள்ளான் .

என்னை அண்ணனான் ஏற்றுக் கொண்டுள்ளான் . என் தாயின் வயிற்றில் பிறந்த தம்பியாகவே அவனை பார்க்கிறேன் ” என்றார். 

 விஷால் பேசும்போது ” நானும் இயக்குநர் மிஷ்கின் அவர்களும் 8 வருடமாக ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று காத்திருந்தோம்.

IMG_0535

அது தற்போது துப்பறிவாளன் என்ற அருமையான படம் மூலமாக நிஜமாகியுள்ளது.  இந்தப் படத்தை ஆரம்பித்த போது முருகராஜ் உட்பட என் நலம் விரும்பிகள் பலரும்,

 ‘விஷால் ஒரு சைக்கோ; மிஷ்கின் ஒரு சைக்கோ . இந்த ரெண்டு சைக்கோக்களும் சேர்ந்து எப்படித்தான் படத்தை முடிக்கப் போவுதோ’ன்னு சொன்னாங்க . இப்போ படம் நல்லா வந்திருக்கு.

மிஷ்கின்   சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு கிடைத்த பொக்கிஷம். துப்பறிவாளன் திரைப்படத்தில் என்னுடைய ‘கேரியர் பெஸ்ட்’ சண்டைக் காட்சிகளை பார்க்கலாம்.

ஒரு தயாரிப்பாளராகவும் , நடிகராகவும் எனக்கு துப்பறிவாளன் பாண்டியநாடை விட முக்கியமான படமாகும். நானும் , பிரசன்னாவும் சிம்ரன் அவர்களின் மிகப்பெரிய ரசிகர்கள்.

IMG_1864

அவரோடு இந்த படத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம். எனக்கு துப்பறியும் நிபுணர்களின் உடல் மொழி மிகவும் பிடித்துவிட்டது. நான் பைரசி வேலை செய்யும் நபர்களை கண்டுபிடித்துவிட்டேன்.

எனக்கு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியும். அவர்கள் யார் , அவர்கள் தனி நபரா அல்லது ஒரு குழுவா என்பதை இன்னும் இரண்டு வாரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பேன்.

நான் காமராஜர் அய்யா அவர்களின் வழியில் நடப்பேன் , ஆனால் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன்.’லட்சுமிகரமான’ பெண்ணை கண்டிப்பாக விரைவில் திருமணம் செய்வேன்.

IMG_1763

ஒட்டுமொத்த திரையுலகமே சேர்ந்து நிச்சயம் புரட்சி தலைவர் எம்.ஜி.யார் அவர்களுக்கு 1௦௦வது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவோம்” என்றார் நடிகர் விஷால்.  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *