திரையிடப்பட்ட ஒரு மெல்லிசைப் பாடல் மிக சிறப்பாக இருந்தது . முன்னோட்டம் பாடல் இரண்டிலுமே ஒளிப்பதிவும் (ரவீந்திர நாத் குரு ) இசையும் (அச்சு) மிக சிறப்பாக இருந்தது .
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மகிழ் திருமேனி
” வித்தியாசமான நிறைய படைப்புகள் சிறப்பாக வரும் காலம் இது . அண்மையில் உருவான நடிகர்களில் எல்லோரையும் கவர்ந்த இரு நடிகர்கள் பாபி சிம்ஹாவும் , மெட்ராஸ் புகழ் கலை அரசனும் . அவர்கள் இருவரும் எதிரெதிர் கதாபாத்திரங்களில் நடித்து இருப்பது இந்தப் படத்துக்கு பெரிய பலமாக அமையும் ” என்றார்
கரு பழனியப்பன் பேசும்போது “ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு’ என்ற வரிகள் அடங்கிய அவ்வையின் முழுப் பாட்டையும் சொல்லி விளக்கம் சொன்னதோடு ” பாபி சிம்ஹாவும் , கலை அரசனும் மிக சிறப்பான நடிகர்கள். அவர்களுக்காக உயரங்களில் ஏறிக் கொண்டு இருகிறார்கள்.
இந்தப் படத்தின் நாயகி ரேஷ்மி மேனன் கூட நல்ல நடிகைதான் . ஆனாலும் அவர் அடைய வேண்டிய உயரத்தை அடையவில்லை. அவர் எதோ ஒன்றை மாற்றிக் கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன் . முக்கியமா ரேஷ்மி மேனன் என்ற தன் பேரில் உள்ள மேனனை கட் பண்ணினால் நல்லது .
ஏன்னா பேருக்குப் பின்னால் ஜாதிப் பெயரை போட்டுக் கொள்ளாத கண்ணியம் தமிழ் நாட்டில் மட்டும்தான் இருக்கு. காரணம் பெரியார் என்ற தாடிக்கார கிழவன். ” என்றார் .
இயக்குனர் எஸ் பி ஜனநாதன் தன் பேச்சில் ” என்னோட புறம்போக்கு படம் ரிலீஸ் ஆன மூணாவது நாள், ஒரு பெரிய புள்ளி எனக்கு போன் பண்ணி , ‘உங்க படத்தை திருட்டு விசிடில பார்த்தேன் . பிரின்ட் நல்லா இல்ல . அதனால் டயலாக் எல்லாம் ஒண்ணும் புரியல. தியேட்டர்ல பாக்க ஆசைப்படுறேன் . டிக்கட் கிடைக்குமா?’ன்னு கேட்டார் . எப்படி இருக்கு பாருங்க .
திருட்டு விசிடில அவர் பார்த்ததே தப்பு. ஆனா அந்த உணர்வே அவருக்கு இல்ல. அப்படி பார்த்ததை படத்தின் டைரக்டர் கிட்டயே சொல்றமே என்ற மேனர்சும் அவருக்கு இல்ல. ஏன்னா அவரு ஒரு பெரும்புள்ளி. அது மாதிரி கொடுமைகள் எதுவும் இந்தப் படத்துக்கு நடக்கக் கூடாது. படத்தின் டிரைலரும் பாடல்களும் மிக அருமை ” என்றார் .
கார்த்திக் சுப்புராஜ் பேசும்போது
“சிம்ஹா நல்ல நடிகர் . ஜிகர்தண்டா படத்துல அவரை நல்லா பயன்படுத்தும் சூழ்நிலை அமைஞ்சது சந்தோஷமான விஷயம். கலை அரசனும் அப்படிதான் . இந்தப் படம் நல்லா ஓட வாய்ப்புள்ள படம் என்பது பாடல் மற்றும் டிரைலரிலேயே தெரிகிறது . என்னோட வாழ்த்துகள் ” என்றார் .
இறுதியாகப் பேசிய பாரதிராஜா ” நான் எம் கே டி. சின்னப்பா காலத்தில் வந்த படங்களையும் பார்த்தவன் . இப்போது சிறப்பாக படம் எடுக்கும் மகிழ் திருமேனி, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரின் படங்களையும் பார்க்கிறேன் .
இந்த தலைமுறை இயக்குனர்களையும் தாண்டி நிற்கும் அளவுக்கு ஒரு சிறப்பான படைப்பை ஆரம்பிக்க இருக்கிறேன். இந்த தலைமுறை இயக்குனர்களுக்கும் கடும் போட்டியை கொடுக்க இருக்கிறேன் “என்று , வியக்கும் வகையில் பேசி முடித்தார்.







