ஜேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் உதயா வழங்க, உதயா, பிரபு, நாசர், ஸ்ரீமான், கோவை சரளா நடிப்பில் ஆசிப் குரைஷி எழுதி இயக்கி இருக்கும் படம் உத்தரவு மகாராஜா .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஏராளமான நடிக நடிகையர் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள்,
மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டு உதயாவை உற்சாகப் படுத்தி வாழ்த்தி பாராட்டிப் பேசினார்கள் .
பேசிய எல்லோரும் தவறாமல் , உதயாவின் இனிய குணம் , நட்பான சுபாவம், , எளிமை ,பிறருக்கு உதவும் பண்பு, உழைப்பு ஆகியவற்றோடு,
இந்தப் படத்தில் அவர் சிறப்பாக நடித்திருப்பதையும் குறிப்பிட்டு மனதாரப் பாராட்டிப் பேசினார்கள்.
“உதயா கதாநாயகனாக நடித்த திருநெல்வேலி படத்தின் மூலம் தான் நான் சமூக கருத்துகளை நகைச்சுவை மூலம் சொல்லும் பாணியையே ஆரம்பித்தேன்.
அதன் பிறகே என் மார்க்கெட் ஸ்திரமானது ” என்று கூறிய விவேக் தொடர்ந்து , ” இந்தப் படத்தின் மூலம்,
அவர் மிகப் பெரிய கதாநாயகனாக உயர்வார் “என்றது உதயாவுக்கு கிடைத்த நிஜமான பாராட்டுகளுக்கு ஒரு சாம்பிள் .
கலந்து கொண்ட அனைவருமே உதயா மாபெரும் கதாநாயகனாக வர வேண்டும் என்று வாழ்த்தினார்கள்
அப்படி உதயாவை பாராட்டி உற்சாகப்படுத்தி வாழ்த்தியது யார் யார் என்பதை கீழே வரும் புகைப்படத் தொகுப்பில் காணவும் .
(படத்தின் பாடல்களும் முன்னோட்டமும் அசத்தலாக இருந்தது . குறிப்பாக முன்னோட்டத்தில் பல கெட்டப்களில்,
ஜெயிக்க வேண்டும் என்ற வெறியோடு உதயா நடித்து இருப்பது புரிந்தது. வாழ்த்துகள் உதயா ) .