தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கமும் v4 என்டர்டெயின் நிறுவனமும் இணைந்து வழங்கும் எம்ஜி ஆர் – சிவாஜி விருது வழங்கும் விழா நடைபெற்றது .
விழாவில் ஏ வி எம் சரவணன் , கமல் ஹாசன் , தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி , அரவிந்த சாமி , மதன் கார்க்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
கமல்ஹாசன், அரவிந்த்சாமி, சுந்தர் சி, காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் , குற்றம் கடிதல் பட இயக்குனர் பிரம்மா , அருண் விஜய், மதன் கார்க்கி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன .
தவிர சங்கத் தலைவர் விஜயமுரளி , செயலாளர் பெரு துளசி பழனிவேல் மற்றும் டைமண்ட் பாபு, ரியாஸ் உள்ளிட்ட பல பத்திரிகை தொடர்பாளர்கள் விருது பெற்றோருக்கு மாலை அணிவித்து கவுரவம் செய்தனர் .
கமல் கையால் விருது வாங்குவது எனக்கு மிகப் பெரிய கவுரவம் என்று மணிகண்டன் கூற , “கமல் சார் போன்ற சாதனையாளர்களை பார்க்கும்போது அவர்கள் இதுவரை எடுத்துக் கொண்டு ஓடிய அஞ்சல் ஓட்டத்தின் கணையை அடுத்து ஏந்தி ஓட ஆவலாக உள்ளது” என்றார் பிரம்மா .
கமல்ஹாசன் தனது உரையில் ” என்னை விட நீங்கள் வேகமாக ஓடவேண்டும் . இல்லை என்றால் அது எங்களுக்கு நீங்கள் செய்யும் துரோகம் ஆகும் . அதை நாங்கள் விரும்ப மாட்டோம் ” என்றார் .
பெரு..துளசி பழனி வேல் நன்றி கூறினார் .