‘தன் முயற்சியில் இருந்து சற்றும் மனம் தளராத விகிரமாதித்தன் மீண்டும் மரத்தின் மீதேறி வேதாளத்தின் உடலை தூக்கிக் கொண்டு இறங்க,
வேதாளம் விக்கிரமாதித்தனிடம் “விகிரமாதித்தா சற்று நில்.நான் ஒரு கதை சொல்லி இறுதியில் ஒரு கேள்வி கேட்பேன் . அதற்கு தக்க விடை சொல்லவில்லை என்றால் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்” என்றது..’
–சென்ற தலைமுறை வரை சிறுவர்களின் சுய கற்பனைக்குத் தீனி போட்ட அம்புலிமாமா விக்கிரமாத்தித்தன் — வேதாளம் கதைளை மறக்க முடியாது .
அந்த சுக அனுபவத்தை நினைவு படுத்தும் வகையில் உருவாகி வருகிறது,வேதாளம் சொன்ன கதை திரைப்படம். ஆரஞ்சுமிட்டாய்மற்றும்றெக்கபடத்தைதயாரித்த ‘காமன்மேன்” பி. கணேஷ் தயாரிக்க,
அஸ்வின்காக்கமனு (இதற்குதானேஆசைப்பட்டாய்பாலகுமாரா, ஜீரோ ) குருசோமசுந்தரம் (ஆரண்யகாண்டம், ஜோக்கர்),ஐஸ்வர்யாராஜேஷ் நடிப்பில்
பல்வேறு விளம்பரப் படங்களையும் சமூக அக்கறைக் குறும்படங்களையும் எடுத்த ரதீந்த்ரன்பிரசாத் எழுதி இயக்கும் படம் வேதாளம் சொன்ன கதை.
இந்த ரதீந்திரன் பிரசாத் பல மரியாதைக்குரிய சாதனைகளுக்கு சொந்தக்காரர் .
தமிழகத்தின் அழகிய மலை நகரான கொடைக்கானலில் பாதரசக் கழிவுகளைக் கொட்டி மாசு படுத்தும் அநியாயத்தை எதிர்த்து இவர் உருவாகிய
‘கொடைக்கானல் வோண்ட’ (Kodaikanal Won’t) என்ற பாடல் வீடியோ உலகையே திரும்பிப் பார்க்க வைத்ததோடு பதினான்கு ஆண்டுகளாக பாதரசத்தைக் கொட்டி கொடைக்கானலை விஷமாக்கியதோடு ,
பணி புரியும் ஊழியர்களின் ஆரோக்கியத்துக்கும் வேட்டுவைத்த யூனிலிவர் நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டினையும் பெற்றுத் தந்தது.( பாடலைப் பார்க்க …. https://www.youtube.com/watch?v=nSal-ms0vcI)
சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவிய அந்த வீடியோ பாராட்டுகளை அள்ளிக் குவித்ததோடு,
மிகப் பெரிய ஹாலிவுட்கலைஞர்கள் அஷ்டன்குட்சர், மார்க்ருவல்லோ, நிக்கிமினாச், கெய்கவசாக்கி, மற்றும் சேகர்கபூர் போன்றவர்களால் பகிரவும் பட்டது.
இவர் எழுதிஇயக்கிய “ஸ்வேயர்கார்ப்பரேஷன்” என்னும்குறும்படம் 26 சர்வதேச அரங்குகளில் திரையிடப்பட்டதோடு மட்டுமன்றி “கேன்ஸ்” பட விழாவில்விருது பெற்றது
சென்னை எண்ணூர் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட சுற்றுச் சூழல் சீர்கேட்டையும், அதனை ஏற்படுத்திய அதிகாரிகளின் அலட்சியத்தையும் தட்டிக் கேட்கும் வகையில்
பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா பாடி, இந்த ரதீந்திரன் அண்மையில் உருவாக்கிய “சென்னை புறம்போக்கு” பாடல்அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதுவும்சமூகவலைத்தளங்களில்தற்சமயம்அதிவேகமாகப் பரவிவருகிறது.
இப்படிப்பட்ட சிறப்புகள் கொண்ட இயக்குனர் ரதீந்திரன் பிரசாத்தே இந்த வேதாளம் சொல்லும் கதை படத்தை தயாரிக்கத் துவங்கிய நிலையில் பின்னர் வந்து இணைந்து இருக்கிறார் கணேஷ்
பிரபல ரெஸ்ட்லிங் குத்துச்சண்டை வடிவமைப்பாளரும் ஹாலிவுட் நடிகருமான இங்கிலாந்தைச் சேர்ந்த கிரேக் பர்ரிட்ஜ் இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் வந்து மிரட்டுவதோடு மட்டுமல்லாமல்
படத்தின் சண்டை காட்சிகளையும் வடிவமைகிறார் . உடன் அசோக் என்ற மாஸ்டரும் உண்டு. படத்தில் அஸ்வின் காக்கமனு விக்கிரமாத்திதனாக நடிக்க, சோம சுந்தரம் வேதாளமாக நடிக்கிறார் .
சர்வதேசவிருதுகள்பலபெற்றஇத்தாலியஒளிப்பதிவாளர்ராபர்டோசஸாராஇந்தபடத்தின் ஒளிப்பதிவாளராகப் பணி புரிகிறார் இயற்கைநிலப்பகுதிகளைபடமாகப் பதிவுசெய்வதில் புகழ் பெற்றவராம் இவர்
ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைக்க ஆனந்த் ஜெரால்டின் என்பவர் படத் தொகுப்பாளராக அறிமுகமாகிறார்
முப்பது சதவீத படப்பிடிப்பு மட்டுமே முடிந்த நிலையில் அதை வைத்து ஒரு பக்காவான சிறு முன்னோட்டம் தயார் செய்து கொண்டு வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக் குழு
சொன்னபடியே காட்சிகள் அட்டகாசமாக இருந்தன . நிலப்பகுதிகள் அழகாக வெளிப்படும் லாங் ஷாட்டுகள், சும்மா டப் டப் என்று தெறிக்காமல் டீடெயிலான முறையில்,
அழகாக எடுக்கப்பட்டு இருந்தன . இருள் – ஒளிப் பயன்பாடும் tone-ம் அசத்தியது
நிகழ்ச்சியில் பேசிய அறிமுக நடிகர் அக்னீஸ்வர் அன்பு ” நான் இதற்கு முன்பே நான் இயக்குனர் ரதீந்திரன் இயக்கிய டிரையல் ஆப் பிளட் என்ற குறும்படத்தில் நடித்துள்ளேன்.
இந்தப் படத்தில் மிக சிறப்பான கேரக்டர் கொடுத்துள்ளார் . ஹீரோ அஸ்வின் மிக அன்பாக பழகுகிறார் . சோமு சாரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார்
நாயகன் அஸ்வின் பேசும்போது
” இயக்குனர் ரதீந்திரன் சமூகம் , அரசியல், சுற்றுச் சூழல் எல்லாவற்றிலும் ஆர்வம் உள்ள இயக்குனர் . அவரது படைப்புகளில் எல்லாம் இப்படி ஏதோ ஒன்று இருக்கிறது .
இந்தப் படத்தில் எனக்கு ஒரு வித்தியாசமான் கேரக்டர் கொடுத்துள்ளார் .படத்தில் வீடியோ கேம் டிசைனராக வருகிறேன் .படத்தில் புராண இதிகாச விசயங்களும் உண்டு .அதில் விக்கிரமாதித்தனும் நான்தான்.
இது ஒரு சாலைப் பயண சாகசப் படம் .
படத்தில் எங்களுடன் நடிக்கும் கிரேக் பர்ரிட்ஜ் போன்ற ஒரு சிம்பிளான நடிகரை பார்க்கவே முடியாது . அவ்வளவு நட்பான மனிதர் . சண்டைக் காட்சிகளில் மிரட்டுகிறார்
படத்தில் எனக்கும் அக்னீஸ்வருக்கும்தான் சண்டைக் காட்சி வருகிறது . எனக்கு கிரேக் பர்ரிட்ஜ் உடனும் சண்டை போட்டு நடிக்க விருப்பம் . இயக்குனரிடம் அப்படி ஒரு சண்டை கேட்டு இருக்கிறேன் ” என்றார்
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும்போது
” நானும் இயக்குனர் ரதீந்திரனும் பத்தாண்டுக்கும் மேல் நண்பர்கள். அண்ணா நகரை சுற்றியபடி நானும் அவரும் எவ்வளவோ கதைகள் பேசி இருக்கிறோம் .
பல கதை விவாதங்களில் அவர் பங்களிப்பு இருக்கிறது . கதைகளை தேர்ந்தெடுப்பதில் அவர் வல்லவர் அவர் இயக்கத்தில் என் இசையில் உருவாந “ஸ்வேயர்கார்பரேஷன்”குறும்படம்
கேன்ஸ் பட விழாவில் பரிசு பெற்றபோது , நாங்கள் இருவரும்தான் போயிருந்தோம் .நிச்சயமாக அவர் ஒரு நல்ல படத்தைக் கொடுப்பார் ” என்றார்
தயாரிப்பாளர் கணேஷ் தன் பேச்சில் ” இயக்குனர் ரதீந்திரன் இந்தப் படத்தின் கதையை என்னிடம் ஒரு வருடம் முன்பே சொன்னார் .
நான் அவரிடம் றெக்க படத்தை முடித்த பின்பு பேசுவோம் என்றேன் . ஆனால் அவர் முன்பே தயாரிக்க ஆரம்பித்து விட்டார் . பின்னர் இந்தப் படத்தின் காட்சிகளை எடுத்தவரை பார்த்து வியந்து,
தயாரிப்பில் சேர்ந்து கொண்டேன் . இந்தப் படம் மே அல்லது ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் ” என்றார்
நடிகர் சோம சுந்தரம் பேசும்போது ” நான் கூத்துப்பட்டறைக்கு உருவாக்கிய நாடகம் ஒன்றை வீடியோவில் படம் பிடித்தவர் இயக்குனர் ரதீந்திரன் .
அப்போது முதலே அவர் பழக்கம் . நல்ல திறமைசாலி . இந்தப் படத்தின் கேரக்டர் எனக்கு நல்ல தீனி ” என்றார்
ஹாலிவுட் நடிகர் கிரேக் பர்ரிட்ஜ் தன் பேச்சில் ” ஐ லவ் யூ ஆல் இன் சென்னை . உங்கள் மொழியின் என்னால் பேச முடியாது. தவறாக நினைக்க வேண்டாம் .
நான் ஒரு நடிகர், தயாரிப்பாளர் , இயக்குனர் , ரெஸ்ட்லிங் கலை வீரர் மற்றும் பயிற்சியாளர் . ரதீந்திரன் எனது நான்கு ஐந்து ஆண்டுகால நண்பர் . அவர் எனது ரெஸ்ட்லிங் ஸ்டுடியோவுக்கு வந்து இருக்கிறார் .
நாங்கள் இணைந்து பணியாற்றி இருக்கிறோம் . இந்தப் படத்தின் மூலம் உங்களுக்கு நல்ல சண்டைக் காட்சிகள் உறுதி. என்னையும் பிடிக்கும் ” என்றார் .
இயக்குனர் ரதீந்திரன் பேசும்போது ” அறுபது எழுபதுகளில் வந்த படங்களில் எல்லாம் ஆக்ஷன் காட்சிகள் ரொம்ப உயிர்ப்புடன் இருக்கும் . இப்ப வர்ற படங்கள் ல அது இல்ல . குறிப்பாக ஹாலிவுட் படங்கள்ல இல்ல
காரணம் எடிட்டிங் என்ற பேருல அவசரம் அவசரமா கட் பண்ணிடறாங்க. ஆனா அந்தக் காலப் படங்கள்ல என்ன நடக்குதுன்னு தெளிவா தெரியும் .
நாம எடுக்கும் படம் நவீனமாவும் இருக்கணும் . அதே நேரம் ஆக்ஷன் காட்சிகள்ல என்ன நடக்குதுன்னும் தெளிவா தெரியணும்னு முடிவு பண்ணேன்
அப்படி வேணும்னு யோசிக்கும்போதுதான் எனக்கு கிரேக் பத்தி தெரிய வந்தது . நான் முதன் முதலா அவர் ஸ்டுடியோவுக்கு போனபோது நடந்த ஒரு சம்பவத்தைப் பார்த்து,
நிஜமா சண்டை போடுறாங்கன்னு நினைச்சேன். ஆனா அது சண்டைப் பயிற்சிஅவர்ட்ட பேசும்போது அவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் புதுசா இருந்தது .
படத்துல இவரைத்தான் பயன்படுத்தனும்னு அப்பவே முடிவு பண்ணேன். அப்புறம் நாங்க மீட் பண்ணும்போது எல்லாம் அவர் சண்டை பண்ணுவார் . நான் அதை வெவ்வேறு கோணங்கள்ல படம் எடுப்பேன் .
2012 ல நானும் அவரும் சேர்ந்து டிரையல் ஆப் ப்ளட் அப்படின்னு ஒரு குறும்படம் பண்ணோம் . அதுல சண்டைப் பயிற்சியாளர் மற்றும் ஹீரோ கிரேக் தான். வில்லனா நடிச்சது அக்னீஸ்வர். அவர் ஒரு மார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் .
அந்தப் படம் எங்க எல்லாருக்கும் திருப்தியா இருந்தது . பலரும் பாராட்டினாங்க .அதுல இருந்து கிரேக் நிறைய படங்களுக்கும் சண்டை பயிற்சி பண்ண ஆரம்பிச்சார் .
அவர் என்னை வச்சு முழுமையான மார்ஷியல் ஆர்ட்ஸ் பிலிம் பண்ண விரும்பினார் . அது நடக்கல . ஏன்னா அவர் கூப்பிட்டப்ப என்னால லண்டன் போக முடியல
இப்ப நான் இந்தப் படத்துக்கு கூப்பிட்ட உடனே சந்தோஷமா வந்துட்டார்
ஆசியாவின் சிறந்த அனிமேஷன் கலைஞரான தாய்லாந்தைச் சேர்ந்த ‘பாப்சந்த்ரு க்ரந்சரித்’ படத்தோட அனிமேஷன் பகுதிகளை எடுக்கறார்.
நார்மலான அனிமேசனா இல்லாம அனிமி என்ற புதிய முறையில் அது இருக்கும் .
ராஜஸ்தான்லஷூட்டிங் முடிச்சு இருக்கோம் . அடுத்து தெலுங்கானா போறோம் .
அதை அடுத்து மத்திய பிரதேசம் குறிப்பா சம்பல் பள்ளத்தாக்கு , உஜ்ஜயினியில் படப் பிடிப்பை தொடர்கிறோம் ” என்றார் .
அசத்துங்க !














