லென்டி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ஐஸ்வர்யா தயாரிக்க ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன்,அகன்ஷா சிங், பால சரவணன், ஜெயபிரகாஷ் அருள் தாஸ் மற்றும் பாலர் நடிக்க, சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் .
தேர்தல் தோல்வியால் இரு ஊர்களுக்கு இடையே பகை ஏற்பட , தோற்ற நபர் (சரத்) ஜெயித்த நபரின்(ஜெயப்பிரகாஷ்) ஊரில் உள்ள பலரைக் கொல்ல, பதிலுக்கு அவர்களும் கொல்ல , வன்மம் வளர்கிறது . ரத்தம் ஆறாக ஓடுகிறது.
தோற்றவரின் மகளும் (மீனாட்சி கோவிந்தராஜன்) ஒரு வேற்று சாதிப் பையனும் காதலிக்க, திருமணம் செய்து தருவது போல நம்ப வைத்து காதலனை கொள்ள பெண்ணின் அப்பாவும் சித்தப்பாக்களும் சாதி வெறியோடு செயல்பட , தலைகீழாக சில விஷயங்கள் நடக்கத் துவங்குகின்றன .
விளைவு என்ன என்பதே இந்தப் படம் .
ஜெய் இசை அமைத்து நாயகனாக நடித்துள்ளார் . இரண்டும் குறையில்லை . காட முட்ட பாடல் சுவை.
மீனாட்சி, அகன்ஷா இருவரும் சிறப்பு . மற்ற நடிக நடிகையரின் பங்களிப்பும் ஒகே. . நகைச்சுவைதான் சுவையாக இல்லை
லொக்கேஷன்கள் கவனம் கவர்கின்றன .
வழக்கமான டெம்ப்ளேட் கதை திரைக்கதை . யூகிக்க முடிந்த திருப்பங்கள் . அதீத யதார்த்த மீறல் . இதயம் தொடாத வசனங்கள் . சிரத்தை இல்லாத இயக்கம் .
ஒளிப்பதிவு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்
காசி விஸ்வநாதனின் படத் தொகுப்பு பாராட்டலாம்
இந்தப் படத்தின் மூலம் திரை உலகுக்கு கிடைத்து இருக்கும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவை வாழ்த்துவோம்