பி ஸ்டுடியோஸ் சார்பில் இயக்குனர் பாலா தயாரிக்க , ஆர் கே சுரேஷ் கதாநாயகனாக நடித்து தனது ஸ்டுடியோ 9 சார்பில் வெளியிட, பூர்ணா, இளவரசு, பக்ஸ், மாரிமுத்து உடன் நடிப்பில், பத்ம குமார் இயக்கி இருக்கும் படம் . மலையாளத்தில் வெளிவந்த ஜோசப் படத்தில் தமிழ் மறுஉருவாக்கம்.
ஒரு நிலையில் மகள் இறக்க, மனைவியும் விபத்தில் இறக்கிறார் . ஆனால் மனைவிக்கு ஏற்பட்ட விபத்து கொலை என்பதை கண்டு பிடிக்கிறார் போலீஸ் அதிகாரி.. அது பற்றி விசாரிக்கும்போது மூளைச் சாவு அடைந்தவர்களின் உடலை ஏழை மக்களுக்குப் பொருத்துவதாக பெயர் பெற்றுக் கொள்ளும் சில மருத்துவமனைகள் அதன் பின்னால் செய்யும் சில பஞ்சமா பாதகங்களையும் அதை வைத்து கோடி கோடியாகப் பணம் பெறுவதையும் கண்டு பிடிக்கிறார் .
ஆர் கே சுரேஷ் தன் உடம்பை தொந்தியும் தொப்பையுமாக குண்டாக்கிக் கொண்டு உருமாறி நிதானமாக வசனம் பேசி நடித்துள்ளார் .
கோடி கோடியாகக் கொட்டி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள் பலர். அவர்கள் உடம்பில் சரியான உறுப்புதான் பொருத்தப்பட்டு உள்ளது என்பதற்கான ஆதாரம் என்ன ? பொருத்தப்பட்ட நோயாளிக்கு கொடுக்கப்படும் உறுதி என்ன ? என்ற இடி போன்ற கேள்வியை படம் எழுப்புகிறது . 