பெண்களை மையப்படுத்தி வரும் படங்கள் தமிழ் சினிமாவில் மிகவும் குறைந்து விட்ட நிலையில் அப்படி ஒரு படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார் நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் .
படத்தின் பெயர் யாதுமாகி நின்றாய் . திரைப்படங்களில் பாடல்களில் நாயகன் நாயகிக்கு பின்னால் ஆடும் பின்னணி நடனக் கலைஞர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு உருவாகும் படம் இது படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய காயத்ரி ரகுராம் “திரைத்துறையில் பணியாற்றும் நடன கலைஞர்களின் சில உண்மை சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டது
பெண்களின் வாழ்க்கையில் ஆரம்பம் முதல் ஒவ்வொரு கட்டத்தையும் எப்படி வாழவேண்டும் என்று கூறும் வகையில் படம் இருக்கும் .
குறைந்த செலவில் பெண்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கவர்ச்சி என்பது இல்லை.
இது என் அப்பாவின் கனவு. மொத்தம் மூன்று பாடல்கள், இதில் புடவை நிலவே என்னும் பாடலை நடிகர் தனுஷ் அவர்கள் பாடியுள்ளார். இப்படத்தை என் குருநாதர் இயக்குனர் திரு A.L.விஜய் அவர்களுக்கு சமர்ப்பிகிறேன்” என்றார்
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடன இயக்குனர் கலா “சினிமாவில் பெண்களுக்கான படங்கள் குறைவாக வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படம் பெண்களுக்கு பெருமையை சேர்க்கும்.
தற்போது இருக்கும் சூழ்நிலையில் பெண்கள்,பெண் குழந்தைகளின் பாதுகாப்பற்ற நிலையை நாமே பார்த்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இப்படம் பெண்களுக்கான ஒரு அழகான திரைப்படம்,
இதை தவிர இப்படத்தில் என் கணவரும் நடித்துள்ளார். எங்கள் குடும்பத்தில் ஒருவர் இயக்குனராகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பார்ப்பவர்களை இது ஒரு அருமையான கதை என்று சொல்ல வைக்கும்” என்றார்.