எம் ஆர் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிக்க, ஆகாஷ் குமார் , தேவிகா, படவா கோபி மற்றும் பலர் நடிக்க,
ராம்ஸ் முருகனின் கதையில் அவரது மற்றும் பண்பு செல்வன் , தயாரிப்பாளர் , இயக்குனர் ஆகியோரின் திரைக்கதையில் எஸ் . சாம் இயக்கி இருக்கும் படம்.
அப்பாவின் (படவா கோபி) பேச்சுக்கு கட்டுப்பெட்டியாக வளர்ந்த பெண்ணை (தேவிகா) பெண் பார்க்க வருகிறது நாயகனின் (ஆகாஷ்) குடும்பம் . கதாநாயகிக்கு முன்பே திருமணம் ஆகி விட்ட விஷயம் எல்லோருக்கும் தெரிய வர, பெண்ணின் குடும்பத்துக்கு அதிர்ச்சி.
நாயகன் அனைவரையும் பயமுறுத்தி வீடியோவாக இதை எடுத்து யூ பியூபில் பதிவிட்டு வருகிறார்.. நாயகன் மற்றும் நாயகிக்கு திருமணமான விசயம் இருவருக்கும் தெரியவில்லை.
இருவரும் காரணத்தை கண்டு பிடிக்க முயல், என்ன ஆனது என்பதே படம்.
நிறைய புதுமுகங்கள். செயற்கையான நடிப்பு.
ஆரம்பத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமாக அறிமுகம் செய்வது , இருவருக்கும் கல்யாணம் நடந்ததைக் கண்டு பிடிக்கும் வரை ஒகே.
அப்புறம் முடில.
இடைவேளை டுவிஸ்ட் , ஹாரர் முயற்சி இருந்தாலும் பலன் பூஜ்யம்.
சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு,சகிஷனா சேவியரின் இசை இரண்டும் பாம்பும் இல்லை. பழுதும் இல்லை.
எடுக்கப்பட்ட விதம், லாஜிக் ஓட்டைகள், ரொம்ப மெதுவான திரைக்கதை, சுவாரசியமின்மை என்று படம் லோலோன்னு அலைய
யோலோ .. அய்யய்யோ .
