பிரபுவின் 200 ஆவது படம் ‘மீன் குழம்பும் மண் பானையும் ‘

meenu

இருநூறாவது படம் என்ற மைல் கல்லைத் தொட்டு இருக்கிறார் , உலகப் பெரு நடிகர் சிவாஜி கணேசனின் புதல்வரான இளைய திலகம் பிரபு .

இஷான் புரடக்சன்ஸ் சார்பில் ஆர்.ஜி.துஷ்யந்தும் அவரது மகன் அபிராமி துஷ்யந்தும் தயாரிக்க, 

இளைய திலகம் பிரபு, நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் , பூஜா குமார்,  ஆஸ்னா ஜவேரி. ஊர்வசி, எம் எஸ் பாஸ்கர் , சந்தான பாரதி, தலைவாசல் விஜய் ஆகியோர் நடிக்க, 
 அமுதேஷ்வர் இயக்கி இருக்கும் படம் மீன் குழம்பும் மண் பானையும்  படத்துக்குதான் , 
பிரபுவின் 200 ஆவது  படம் என்ற அந்தஸ்து கிடைத்து  இருக்கிறது 
meen 5
தமிழ் நாட்டில் இருந்து  மலேசியா போய் , நம்ம ஊரு ஸ்டைல் ஹோட்டல் நடத்தும் ஒருவரின்  மகனுக்கும் மலேசிய பெண் ஒருத்திக்கும் வரும் காதல் ,
இவர்களுக்கிடையில் வரும் ஒரு லேடி  டான் என்று போகும் கதை இது . 
படத்தின் பாடல்களை நடிகர் சூர்யா வெளியிட, அந்த நிகழ்வுக்குப் பிறகு பத்திரிக்கையளர்களை சந்தித்தது படக் குழு 
படம் பற்றிப் பேசிய பிரபு “இந்தப் படத்தின் கதையை என்னிடம் இயக்குனர் சொல்லி விட்டு , படத்தில் என் மகனாக காளிதாஸ் நடிக்கிறார் என்று சொன்ன போது மிகவும் சந்தோஷப்பட்டேன். 
meen 7
சின்ன வயசு முதலே எனக்கு காளிதாசை தெரியும். 
ஒரு படப்பிடிப்பில் நானும் ஜெயராமும் நடித்த போது இந்த காளிதாஸ்  சின்னப் பையன் . ஒரு நாள் அழுது கொண்டே என் ரூமுக்கு வந்தான் .’ ஏம்ப்பா அழற?’ன்னு கேட்டப்ப , 
‘எங்கப்பா எனக்கு ஐஸ்கிரீம் கொடுக்கவே மாட்டேங்கறாரு . நீங்க  தர்றீங்களா?’ ன்னு கேட்டு , என் ஃபிரிட்ஜ்ல இருந்து ஐஸ் கிரீம் எடுத்து சாப்பிட்டுட்டு  போனான் . அதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்தது .
நான் டைரக்டர் கிட்ட சந்தோஷமா சம்மதம் சொன்னேன் . 
meen 6
அப்புறம் புரடியூசர் யாருன்னு பார்த்தா நம்ம வீட்டுப் பிள்ளை துஷ்யந்த் . அடடா ! இன்னும் ரொம்ப சந்தோஷமா இருந்தது .
மலேசியாவில் பல ஊர்கள்ல படப்பிடிப்பு நடத்தி இருக்கோம் .படம் ரொம்ப நல்ல வந்துருக்கு . 
காளிதாஸ்  பிரம்மாதமா நடிச்சு இருக்காரு . அவர் மட்டுமில்ல….ஆஸ்னா, ஊர்வசி, பூஜா குமார் , எம் எஸ் பாஸ்கர் , சந்தான பாரதி, தலைவாசல் விஜய் எல்லாரும் சிறப்பா நடிச்சு இருக்காங்க .” என்றவரை இடை மறித்து 
“முதல் படமான சங்கிலி படத்தில் நடித்த போது,  200 படம் நடிக்கும் அளவுக்கு வருவோம்னு நினைச்சீங்களா ?”  என்று  நான் கேட்டேன்.
meen 3
“நிச்சயமா இல்லை ” என்று உடனே ஆரம்பித்த பிரபு  “நானெல்லாம்  நடிகனானது ஒரு விபத்து , 
வீடல அப்பாவை பார்க்க வர்ற பிரமுகர்கள் கண்ணுல நானும்  அப்படியே படுவேன். அப்படி என்னை பார்த்த இயக்குனர் சி வி ராஜேந்திரன்,  அப்பா ஹீரோவா நடிச்ச  சங்கிலி படத்துல என்னை நடிக்க வச்சார் .
அந்தப் படம் 1982 ஏப்ரல் 14 ஆம்தேதி வெளியாச்சு . 
நான் எல்லாம் நடிக்கறதுக்கு எந்த பயிற்சியும் எடுக்கல . எந்த இன்ஸ்டிடியூட்டுக்கும் போகல . (தேவை இல்லை சார் . உலகத்தின்  சிறந்த நடிப்புப் பல்கலைக் கழகமே  உங்க  வீட்டுலதான் இருந்தது ) 
meen 4
சங்கிலி படத்துக்கு அப்புறம்  கொஞ்ச நாள் என்ன ஏதுன்னே தெரியாம வர்ற படங்கள் எல்லாம் நடிச்சேன் . அதுல ஒரு பிரேக் விழுந்தது . ஒரு நிலைக்கு அப்புறம்தான் படங்களை செலக்ட பண்ணி நடிக்கவே  ஆரம்பிச்சேன் . 
34  வருஷத்துல 200 ஆவது படத்தை தொட்டு இருக்கேன் . இதுல 73  டைரக்டர்களோட முதல் படத்துல நடிச்சு இருக்கேன். 
என்னோட வெற்றிகளுக்கு எல்லாம் என்னை வைத்து படம் எடுத்த இயக்குனர்களும் டைரக்டர்களும்தான் காரணம் ” என்றார் .
 அடுத்து, ”இந்த 200 படங்களில்உங்களுக்குப் பிடித்த  டாப் டென் படங்களை சொல்ல முடியுமா ?”  என்றேன் . 
meen 1
“நிறையவே  இருக்கு.  முதல் படம் சங்கிலி ,அடுத்து கோழி கூவுது , அப்பாவோட நடிச்ச  மிருதங்க சக்கரவர்த்தி, சந்திப்பு , நீதிபதி, மாதிரியான படங்கள்…
அப்புறம் பாலைவன ரோஜாக்கள், அறுவடை நாள் , சின்னத் தம்பி பெரிய தம்பி, என் தங்கச்சி படிச்சவ , அக்னி நட்சத்திரம் , மனசுக்குள் மத்தாப்பு , அஞ்சலி , சின்னத் தம்பி , நூறவது படமா வந்த ராஜகுமாரன் ….
இப்படி எவ்வளவோ படங்கள் இருக்கு .
meen 2
நான் நடிச்சு  லேட்டஸ்ட்டா  வந்த வெற்றிவேல் கூட எனக்கு ரொம்பப் பிடிச்ச படம்தான் ” என்றார் . 
தொடர்ந்து நடித்து,  விரைவில் முன்னூறு  படங்கள் காண வாழ்த்துகள்,  பிரபு சார் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →