நதிகள் நனைவதில்லை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான பி.சி.அன்பழகன் தனது படத்துக்கு திரையரங்கு கிடைப்பதில் இருக்கும் பிரச்னை குறித்து அதிமுக தலைவர் ஜெயலலிதாவுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார் .
“ஒரு வீட்டை விற்று படம் தயாரித்தேன் . இன்னொரு வீட்டை விற்று படத்தை வெளியிட்டேன் . மூன்றே கால் கோடியில் எடுக்கப்பட்ட இது போன்ற சின்னப் படங்கள் எல்லாம் ரசிகர்களின் வாய்வழிச் செய்தியாக வரும் பாராட்டுக்கள் மூலமே நன்றாக ஓட முடியும் . ஆனால் அதுவரை படத்தை தியேட்டரில் இருக்க விடாமல், ஓடுகிற படத்தை ஓட விடாமல் தடுக்கும் கும்பல் ஒன்று கோடம்பாக்கத்தில் இருக்கிறது.
இதனால் வியாழக் கிழமை வரை பணக்காரராக இருக்கும் தயாரிப்பாளர்கள் வெள்ளிக் கிழமை பிச்சைக்காரர்களாக மாறி விடுகிறார்கள். வெள்ளிக் கிழமை என்பது தமிழ் சினிமாவின் துக்க நாளாக மாறி விட்டது .
அந்த வகையில்,ஒன்றரை வருட காலமாக தூங்காத தெரியாத இமைகளோடு உழைத்த என் கனவையும் பொருளாதாரத்தையும் அழிக்க, இப்படி தியேட்டர்களை கையகப்படுத்தி எங்களை அழிக்கும் இரண்டு மோசமான நபர்கள் இருக்கிறார்கள் . அந்த இரண்டு நாசகாரர்களும் தாங்கள் எடுக்கும் இரண்டு குப்பைப் படங்கள் மட்டுமே எப்போதும் இருக்க வேண்டும் என்று செயல்படுகிறார்கள் . எல்லாருக்கும் பொதுவான சினிமா அந்த இரண்டு நாசகாரர்களிடம் அகப்பட்டு விட்டது.
அவர்களிடம் இருந்து இருந்து சிறு படத் தயாரிப்பாளர்களையும் தமிழ் சினிமாவையும் தெய்வம் போல நீங்கள்தான் காப்பாற்ற முடியும் ” என்று கோரிக்கை வைத்திருக்கிறார் .