இயக்குனர் வினோத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரது கத்தரிக்கோல் பதில்களும் :
1. துணிவு யாருடைய துணிவு ? என்ன துணிவு?
துணிவு என்பது படத்தில் அஜித் சாரின் கேரக்டர் . அதனால்தான் துணிவு இல்லையேல் அழகு இல்லை என்ற முழக்கம் வைத்தோம் . என்ன துணிவு என்பது படத்தில் தெரியும்.
2. துணிவு பண மதிப்பீடு பற்றிய படமா?
எல்லாவற்றையும் சுவாரசியமாக சொல்ல முயன்று இருக்கிறோம் . அதில் பணத்தைக் கையாள்வதும் ஒரு பகுதி
3. ஒரே ஹீரோ ஒரே இயக்குனர் மூன்று படங்கள் ; இது ஆரோக்கியமா?
பணிபுரியும் சூழலும் நல்லது சொல்ல வேண்டும் என்ற நோக்கமுமே முக்கியம் . அப்படித்தான் நேர்கொண்ட பார்வை, வலிமை , துணிவு மூன்று படங்களையும் எடுத்துள்ளோம்
4. ஒரு படத்துக்காக துறை சார்ந்த வல்லுநர்களோடு விவாதிப்பது உண்டா?
இதுவரை இல்லை . இந்தப் படத்துக்காக சீனிவாசன் வெங்கட் இருவரோடு விவாதித்து உள்ளேன்
5. படப்பிடிப்புத் தளத்தில் அஜீத் எப்படி இருப்பார். ?
நடிகராக , ஸ்டாராக இருக்க மாட்டார் . பக்கத்து வீட்டு நபர் போல, யூனிட்டில் ஒருவராக இருப்பார். நடிகர் இயக்குனர் என்ற உறவில் ஒருவர் ஒரு விஷயம் சொன்னால் அது சரியாக இருக்கும் என்று இருவரும் நம்புவோம் . பரஸ்பரம் சிறப்பாக இருக்கும் . பெரும்பாலும் படத்தைப் பற்றியே பேச்சு இருக்கும்
6. சினிமா அரசியல் பற்றி உங்கள் கருத்து ?
ஒருவர் தவறானவராக இருந்தால் அந்த துறை சார்ந்த அனைவருமே தவறு என்று பொதுப்படையாக சொல்லக் கூடாது என்பதில் நானும் அஜித் சாரும் நம்பிக்கை உள்ளவர்கள்
7. எதிர்காலத்தில் காமெடி, பாண்டசி படங்கள் செய்வீர்களா?
சுத்தமாக ஐடியா இல்லை,
8. ஒரே நாளில் விஜய் அஜித் படம் ரிலீஸ் . இது சரியா?
ஒரு ஆரோக்கியமான போட்டியா பாக்கலாம். பொங்கலுக்கு நிறைய விடுமுறை இருக்கு. ஆக ரெண்டு படமும் பாக்கலாம். முடியாதவர்கள் செலெக்ட் பண்ணி ஒரு படம் பாக்கலாம்.
9. நடிகருக்கும் அப்பால் அஜித் பற்றி …
அவரது நிதி மேலாண்மை அற்புதமானது . வரி கட்டுவதில் சரியானவர் . அது பற்றி மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போது, ”வரிக்கான தொகையை நீங்களே எடுத்து ஒரு கணக்கில் போட்டு வையுங்கள். அதை சரியாக காட்டுங்கள் , மீதம் உள்ள தொகையில் பத்து சதவீதம் மற்றவர்க்கு உதவ எடுத்து வையுங்கள் . மிச்சம் உள்ள பணம் தான் உங்க பணம்” என்பார்
1 0. மீண்டும் அஜித்துடன் இணைவீர்களா?
அவர் அழைத்தால் மறுக்க முடியுமா?
11. ரசிகர்களுக்கு அஜித் சொன்ன அறிவுரை?
”உங்களுக்கு பிடித்த ஹீரோ படம் பாருங்கள் ரசியுங்கள் . ஆனால் அதை வைத்து யாரையும் திட்டாதீர்கள் . உங்கள் வாழ்வில் சினிமா ஒரு பகுதிதான் . அதுவே வாழ்க்கை அல்ல . குடும்பத்தைப் பாருங்கள் என்பார் .

