ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்க, நாக சைதன்யா, அரவிந்த் சாமி, கீர்த்தி ஷெட்டி, ப்ரியாமணி , சரத்குமார், பிரேம்ஜி அமரன் நடிப்பில் வெங்கட் பிரபு எழுதி இயக்கி தெலுங்கு மற்றும் தமிழில் வந்திருக்கும் படம்.
ஒரு நேர்மையான கான்ஸ்டபிள் (நாக சைதன்யா). அவனை வேண்டும் என்றே மட்டம் தட்டும் ஒரு இன்ஸ்பெக்டர் . கான்ஸ்டபிளுக்கு பாசமுள்ள அப்பா , அம்மா, அண்ணன் (ஜீவா) . கான்ஸ்டபிள் காதலிக்கும் பெண்ணின் ( கீர்த்தி ஷெட்டி) பெற்றோர் , அந்தக் காதலை ஏற்காத காரணத்தால் கொஞ்சம் பிரச்னை.
இந்த சூழலில் முதல்வர் (பிரியாமணி ) தனது முன்னாள் அடியாளும் இப்போது முட்டிக் கொண்டு இருப்பவனுமான ஒரு தாதா (அரவிந்த் சாமி) தனக்கு குடைச்சல் கொடுப்பதால் அவனைக் கொன்று , தனது அரசியல் நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ள போராடுகிறார் . அதற்கு கமிஷனர் (சரத் குமார்) அம்பாக செயல்படுகிறார். அதற்கு நாயகனின் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரும் உதவுகிறார் .
ஆனால் சிபிஐ அதிகாரி (சம்பத் குமார்) தாதாவை கோர்ட்டில் ஒப்படைக்க முடிவு செய்து அவனை துரத்தி வருகையில் விபத்து ஏற்படுகிறது . அதிகாரி கையில் அடையாள அட்டை இல்லாத நிலையில் இருவரையும் கைது செய்து தனது ஸ்டேஷன் லாக்கப்பில் அடைக்கிறான் நாயகன் .
விஷயம் அறிந்த அரசாங்கம் ஸ்டேஷனுக்கே வந்து தாதாவை கொலை செய்ய முயல்கிறது . கமிஷனருக்கு இன்ஸ்பெக்டரும் உடந்தை . ஆனால் சிபி ஐக்கு நாயகன் உதவ, ஒரு நிலையில் தனது குடும்பத்தின் இழப்புக்கும் காரணமான அந்த தாதாவையே மாநில அரசாங்கம் மற்றும் போலீசிடம் இருந்து காப்பாற்றி கோர்ட்டில் ஒப்படைக்கும் பணி நாயகனுக்கு வர, நடந்தது என்ன என்பதே படம்.
முதல் அரைமணி நேரம் பொறுமையை சோதிக்கும் படம், தாதா அரவிந்த்சாமி வந்த பிறகு பட்டையைக் கிளப்புகிறது . படத்தின் பலமே அரவிந்தசாமியின் நடிப்பும் அவருக்கு வெங்கட் பிரபு எழுதி இருக்கும் வசனங்களும்தான்.
நாக சைதன்யா சிறப்பாக ஆடுகிறார், அடிக்கிறார். உற்சாகமாக நடிக்கிறார். சொந்தக் குரலில் தமிழ் பேசுகிறார்.
கீர்த்தி ஷெட்டி அழகோடு நடிப்பும் ஒகே .
ஜீவாவின் பிளாஷ்பேக் அதில் கயல் ஆனந்தியின் பங்களிப்பு, ஜீவாவின் நடிப்பு யாவும் இயல்பு நெகிழ்ச்சி . சரத்குமார் கம்பீரம்.
எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவு அபாரம் .
இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் இணைந்த இசையில் பின்னணி இசை பரபரப்பு..
நகைச்சுவை , ஆக்ஷன், பிரம்மாண்டம் , பரபரப்பு என்று கமர்ஷியலாக இயக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது குடும்பத்துக்கு ஒரு காலத்தில் செய்த செயலுக்கு பழி வாங்கும் விதமாக பெண் முதல்வர் கேரக்டரை வைத்துள்ளார் . ஆனால் அதே நேரம் கவனமாக மிக ஒல்லியான முதல்வராகக் காட்ட பிரியாமணியை நடிக்க வைத்துள்ளார் .
லாஜிக் குறைவான சுவாரஸ்யமான அதிரடி ஆக்ஷன் மசாலா !