ஆர் கே தயாரித்து கதாநாயகனாக நடிக்க ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளிவந்த எல்லாம் அவன் செயல் படத்தை அடுத்து , அதே யூனிட் அப்படியே இணைந்து வழங்க மக்கள் பாசறை தயாரிப்பில் ஆர்கே — பூனம் கவுர் நடிக்க ஸ்ரீகாந்த் தேவா இசை மற்றும் ராஜரத்தினம் ஒளிப்பதிவில் ஷாஜி கைலாஷ் இயக்கி இருக்கும் படம் என் வழி தனி வழி .
‘படத்தின் இசையை விஜய் சம்பிரதாயமான முறையில் வெளியிட, அதைத் தொடர்ந்து . என் வழி தனி வழி’ படத்தின் பாடல்கள் ,ட்ரெய்லர் புதுமையான முறையில் ‘மொபைல் ஆப்’ பில் புது தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டன. . இந்த முறையில் இந்தியாவிலேயே முதல் முயற்சி ‘என் வழி தனி வழி’ படம்தான். இதன் படி இதற்கான கோடிங் அமைக்கப்பட்ட பேப்பர் மீது ஸ்மார்ட் போன் கொண்டு கிளிக்கினால் உடனே போனில் பாடல்களும் டிரைலர்களும் டவுன்லோட் ஆகி போனில் தெரியும் .
நிகழ்ச்சியில் ஆர்கே பேசும் போது ” இந்த ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டை வேறு மாதிரி புதிய வழியில் செய்ய ஆசைப்பட்டேன்.வருங்காலம் இனி தொழில்நுட்பத்தின் கையில்தான். வருங்காலம் இனி மீடியா கையில்தான். எனவேதான் இம் முயற்சியை செய்துள்ளோம்.இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் போன்றவற்றை ரசிகர்கள் எவரும் இருந்த இடத்திலிருந்து பார்க்கும் கேட்கும் வகையில் புது தொழில்நுட்பத்தில் வெளியிட்டுள்ளோம். இதன்படி படத்தின் விளம்பரத்தையோ,போஸ்டரையோ மொபைல் போனில் க்ளிக் செய்தால் போதும் பாடல்களைக் கேட்கலாம். ட்ரெய்லரைப் பார்க்கலாம்.
இனி யாருடைய விவரம் தேவை என்றாலும் அவர் முகத்தை மொபைலில் ஒரு போட்டோ எடுத்தால் போதும். ,ஒரு புகைப்படத்தை வைத்தே எல்லாவிவரமும் கிடைக்கும். இதுதான் லேட்டஸ்ட் தொழில்நுட்பம்.
இந்த ஆடியோ வெளியீட்டை விமானத்தில் பறந்தபடியே வெளியிட எண்ணினேன். ஆனால் அதையும் தாண்டி இதைக் கொண்டு சேர்க்கும் மீடியா முன் அறிமுகம் செய்யவே இங்கு வருவதாக முடிவு செய்தேன்.
இதை இந்தியாவிலேயே முதன் முதலில் அறிமுகம் செய்ததற் காக பெருமைப் படுகிறேன். ‘என் வழி தனி வழி’ இது ஒரு போலீஸ் அதிகாரி பற்றிய விறுவிறு கதை.இப்படம் ஜனவரி 23ல் வெளியாகிறது. படத்தில் பாடல்களுக்கு எனக்கு ஆட வரவில்லைதான்.சுமாராக ஆடியுள்ளேன். ஆட ஆட ஆட்டம் வருமென்று நம்புகிறேன்.
2015–ல் மூன்று படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். இதே படக்குழுவைக் கொண்டுஅடுத்து ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்கிற படம் எடுக்க இருக்கிறோம். பிப்ரவரியில் படப்பிடிப்புக்குச் செல்கிறோம். இந்த’என் வழி தனி வழி’படம் எங்கள் முந்தைய ‘எல்லாம் அவன் செயல்’ படத்தைப் போல பத்து மடங்கு நன்றாக வருமென்று நினைக்கிறேன். “என்றார்
தன் படம் பேசட்டும் என்ற கருதியோ என்னவோ ஷாஜி கைலாஸ் ”வணக்கம் நன்றி”என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
“எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன். நடிக்கும் எங்களுக்கே சிரிக்கும் படியான காமெடி இப்படத்தில் இருந்தது. டைரக்டர் கோபப்படாமல் வேலை வாங்கினார். .” என்றார் நடிகர் சிங்கமுத்து..
” விறுவிறுப்பு ,சுறுசுறுப்பு, பரபரப்பு மூன்றும் உள்ள இயக்குநர். ஈடுபாடும் அர்ப்பணிப்பும் உள்ள நடிகர் ஆர்.கே. நிச்சயம் இந்தப்படம் ஜெயிக்கும் “– இது இயக்குநர் டி.பி.கஜேந்திரன்,
இயக்குநர் செந்தில் நாதன் தனது பேச்சில் “படம் நிஜமாகவே நன்றாக வந்திருக்கிறது. 2 நாளில் எடுக்க வேண்டிய காட்சிகளை அரை நாளில் எடுத்த இயக்குநரைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். “என்றார்.
”நடிகர் ஆர்கேவையும் ஷாஜிகைலாஸையும் எனக்கு10 ஆண்டுகளாகத் தெரியும் பலதொழில்கள் இருந்தாலும் ஆர்.கே சினிமா மீது ஆர்வம் கொண்டவர். “என்று கூறி வாழ்த்தினார், தயாரிப்பாளர், நடிகர் ஞானவேல்