கல கல .. லக லக .. ‘நண்பேன்டா ‘

Udhayanidhi Stalin, Nayanthara in Nanbenda Movie Stills

நண்பேன்டா படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்தில் நயன்தாரவை விடவும் அதிகம் கவர்வது உதயநிதி ஸ்டாலின் நடனம் ஆடி இருக்கும் விதம்தான் . அட என்று ஆச்சர்யப்படும்படி அட்டகாசமாக ஆடி இருக்க, சக ஹீரோக்கள் எல்லாம் போன் பண்ணி ”என்னங்க இப்படி கலக்கி இருக்கீங்க?’ என்று பாராட்டுகிறார்களாம்.

“இந்தப் படத்துல முதன் முதலா ஃபைட்டும் பண்ணி இருக்கேன் ” என்கிறார் உதயநிதி….  “ஒகே ஒகே படத்துலயே சண்டைக்காட்சி அமைக்கணும்னு படத்தோட டைரக்டர் ராஜேஷ் சொன்னாரு . நான்தான் ‘அதெல்லாம் வேணாம் சார்’ னு சொல்லிட்டேன் ” என்ற ஃபிளாஷ்பேக் தகவலோடு .

nanbenda 6

எனில், இந்த நண்பேன்டா படத்தில் வரும் ஃபைட் எப்படிப்பட்டதாம் ? “இது ரொமாண்டிக் ஃபைட் “என்கிறார் இயக்குனர் ஜெகதீஷ் , எம் .ராஜேஷிடம் உதவியாளர் ஆக இருந்தவர் இவர் .

ரொமாண்டிக் ஃபைட் என்றால் ? நயனதாராவுக்கும் உதயநிதிக்கும் சண்டையா ?

“அந்த ஃபைட் படம் பூரா இருக்கு. ஆனா நாங்க ரொமாண்டிக் ஃபைட் னு சொல்ல வருவது என்னன்னா… நயன்தாராவை தூக்கிக்கிட்டு வில்லன்களோட போடற சண்டை ” என்கிறார் உதய்.

nanbenda 2

“நண்பேன்டா படத்தின் கதை என்ன?” என்று கேட்டதும் காதலிக்க நேரமில்லை நாகேஷ் மாதிரி,  “அதைத்தான் என்னன்னு யாரும் கேக்கவே கூடாது ” என்று சொல்வார் போலவே தோன்றியது இயக்குனர் ஜெகதீஷை பார்த்த போது.

ஆனால் நல்ல பிள்ளையாய் பக்குவமாய் படத்தின் கதையை சொல்கிறார் ஜெகதீஷ் ” எதற்கும் டோன்ட் கேர் என்ற மன நிலையில் உலவும் ஹீரோவின் வாழ்வில் நிகழும் சில சம்பவங்கள் அவனை பெற்றோரை மதிக்கிற பொறுப்பான நபராக  மாற்றுகிறது . அதன் பின்னர் நடக்கும் சில திருப்பங்கள் அவற்றால் ஏற்படும் திரில் இவை அடங்கிய ரொமண்டிக் காமெடி திரில்லர்தான் இந்தப் படம். குடும்பத்தோடு பார்க்கிற கோடை விடுமுறைக் காமெடி கொண்டாட்டம்தான் இந்தப் படம் ” என்கிறார்,   பனிரெண்டாவது தேர்வில் பத்து மார்க் கேள்விக்கு பக்காவாய் பதில் எழுதும் நல்ல படிக்கிற மாணவன் மாதிரி .

nanbenda 10

ஒகே ஒகே படம் துவங்குவதற்கு முன்னர் உதயநிதியை வைத்து சில காட்சிகள் எடுத்துப் பார்த்தபோது சந்தானம் கேரக்டரில் நடித்தவர்தான் இந்த ஜெகதீஷ். “அப்புறாம் என்ன டைரக்டர் சார்… ! உங்க படத்துல கதாநாயகியை கல்யாணம் பண்ணிக்க வர்ற அமெரிக்க மாப்பிள்ளை மாதிரி ஒரு வெயிட் கேரக்டர் போட்டுக்க  வேண்டியதுதானே ?” என்றேன் . “அதெல்லாம் வேணாம் சார் . ஒன்லி டைரக்ஷன் ” என்கி றார் ஜெகதீஷ் (பார்ட்டி படு விவரம் போல !)

சரி இந்த படத்தில் சந்தானம் கேரக்டர் என்ன என்றால் ” நண்பன்தான் . அவருக்கு ஒரு ஜோடி கூட உண்டு ” என்று இயக்குனர் கூற “ஆனா படத்துக்கு நண்பேன்டா என்று பெயர் வைத்து இருந்தாலும் படத்துல சந்தானம் அந்த வசனத்தை பேசவே இல்ல ” என்கிறார் உதயநிதி .

nanbenda 5

‘நீங்க நடிக்கிற  அடுத்த படமான கெத்து , அதற்கு அடுத்த படம் இரண்டிலும் சந்தானம் இல்லையாமே?’

“ஆமா… தொடர்ந்து சேர்ந்து பண்ண வேணாம் . கொஞ்சம் கேப் விடுவோம்னுதான். இதுக்கு முன்ன வந்த படங்களில் சந்தானம் இல்லன்னா யோசிச்சு கூட பாக்க முடியாது . உண்மையில் இந்தப் படத்துக்கே கூட அவர் தேவை இல்ல . ஆனா அமைஞ்சது . அடுத்த படத்தில் கருணாகரன் என் கூட பண்றார் ” — இதுவும்  உதயநிதியே

nanbenda 1

மற்ற தயாரிப்பாளர்களின் படத்துக்கு எல்லாம் வரி விலக்கு கிடைக்காமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் .

ஆனால் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படத்துக்கு வரி விலக்கு கிடைக்காமல் போவதற்கு வேறு காரணமே தேவை இல்லை . அவர் தயாரிக்கிற படம் என்பது மட்டுமே போதுமான காரணம்.

அந்த வகையில் நண்பேன்டா படத்துக்கும் வரி விலக்கு கிடையாது என்று கூறிவிட்டார்களாம் . .

nanbenda 8

“மொத்தம் 53 மெம்பர் இருக்காங்க . ஆனா என் படத்துக்கு ஒரு குறிப்பிட்ட ஆறு பேர் மட்டுமே வர்றாங்க. என் படத்துக்கு வேண்டுமென்றே வரி விலக்கு மறுக்கிறார்கள்னு அவங்க ஆறு பேர் மேலயும் நான் முன்னே கேஸ் போட்டு இருக்கேன் . அவங்க ஆறு பேரும்தான் நண்பேன்டா படத்தையும் பாக்க வந்தாங்க. படம் பாக்கறதுக்கு முன்னாடியே வரிவிலக்கு கிடையாதுன்னு சொல்லிட்டு அப்புறம் படம் பார்த்துட்டு போனாங்க . வர்ற திங்கள்கிழமை இந்த விசயத்துக்காக மறுபடியும் கோர்ட்டுக்கு போறேன்” என்கிறார் உதயநிதி .

ஒண்ணு செய்ங்க உதய்… திருக்குறள் , சிலப்பதிகாரம் என்று பேர் வச்சு படம் எடுங்க… என்ன பண்றாங்கன்னு பாப்போம் )

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →