கில்டு பிரச்சினைகள் குறித்து தலைவர் ஜாக்குவார் தங்கம்.

தென்னிந்திய திரைப்படம்  மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் சங்கத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பத்திரிகையாளர்களுடன் பேசினார் 
 
” தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக சில பிரச்சினைகள் சென்று கொண்டு இருக்கின்றன.. இது குறித்து சந்தா கட்டாத ஒரு சில உறுப்பினர்கள் என்னைப் பற்றி தவறாக சொல்லி வருகின்றனர். கடந்த 2015ல் நான் கில்ட்  செயலாளராக பொறுப்பேற்றேன். அப்போது சங்கத்தில் சில ஆயிரங்கள்தான் இருந்தது. 2018ல் தலைவரான பின்பு இன்று ரூ.6.50 கோடி உள்ளது. கில்ட் மூலம் நிறைய உதவிகள் செய்து வந்தோம். கில்ட் தற்போது நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். மேலும் உறுப்பினர்கள் மற்றும் சில நிர்வாகிகள் உதவியுடன் இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது.
 
கடந்த 2018ல் நடந்த தேர்தலில் நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். எனது அணியில் சிலரும் எதிர் அணியில் சிலரும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வந்ததும் சங்கத்தைப் பூட்ட வேண்டும் என்றனர். நான் ஏன் பூட்ட வேண்டும் என்றேன். இதில் சில விஷயங்கள் நடக்கிறது பூட்டிவிட்டு மீண்டும் திறக்கலாம் என்றனர்‌. நான் முடியாது என்றேன். அப்போது தனியாக மீட்டிங் நடத்தினர். வங்கியில் உள்ள பணத்தை எடுக்க தங்களுக்குதான் உரிமை உள்ளது என்றனர்.‌ ஏனென்றால் அவர்களது நோக்கம் பணத்தை எடுப்பது தான். 
 
வங்கியில் போலியாக லெட்டர் பேட் தயாரித்து பணத்தை எடுக்க முயற்சித்தனர். மீண்டும் ஒரு மீட்டிங் நடத்தி என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதாக கூறினார்கள். நான் அவர்களை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினேன். இதனால் அவர்கள் நீதிமன்றம் சென்றனர். ஆனால் நீதிமன்றம் அவர்கள் உள்ளே வரக்கூடாது என்று உத்தரவிட்டது. 
 
அவர்கள் மீது பல புகார்கள் காவல்நிலையத்தில் உள்ளது. மேலும் வடபழனியில் ரூ.13 கோடியில் சங்கத்திற்கு இடம் பார்த்தோம். கட்டிடம் கட்டி டப்பிங் தியேட்டர், எடிட்டிங் தியேட்டர் கட்டி சங்க உறுப்பினர்களின் படங்களுக்கு குறைந்த செலவில் தரத் திட்டமிட்டோம். இதன்‌ மூலம் கில்ட் உறுப்பினர்களுக்கு உதவி செய்ய நினைத்தோம். இது எதிரிகளுக்கும் சில சங்கங்களுக்கும் பிடிக்கவில்லை. இதனால் என் மீது பல குற்றச்சாட்டுக்கள் வைத்தனர். கில்ட் பணத்தை எடுத்து விட்டேன் என்றனர். 
தற்போது அவர்கள் மீது நான் வழக்கு தொடுத்து எப்ஐஆர் போடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட உள்ளது. சங்கத்திற்கு தேர்தல் வேண்டும் என்று நான்தான் நீதிமன்றத்தில் கேட்டேன். ஆனால் நான் தேர்தல் நடத்த மாட்டேன் என்கிறேன் என்று சொல்கின்றனர்.
 
சந்தா கட்ட முடியாத விரல்விட்டு எண்ணக்கூடிய சில உறுப்பினர்கள் தேர்தல் நடத்த விடமாட்டேன் என்கின்றனர். மேலும் கில்ட் சங்கம் போலவே இவர்களும் ஒரு சங்கத்தை தொடங்கி கோடிக்கணக்கில் வசூல் செய்தனர். இதையும் நீதிமன்றம் மூலம் தடுத்தோம். நான் இருக்கும் வரை பணத்தை எடுக்க முடியாததால் வேறு நபரை வைத்து எடுக்க பார்க்கிறார்கள். கொரோனாவுக்கு முன்பு என்னை அழைத்து பேரம் பேசினர். தற்போது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எல்லாம் தயாரிப்பாளர்கள் கிடையாது .மீடியேட்டர்கள்தான்.
 
நான் 2023 வரை உள்ள உறுப்பினர்களை வைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்கிறேன். ஆனால் அவர்கள் 2013வரை உள்ள உறுப்பினர்களை வைத்து மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும் என்கின்றனர் இதுதான் தற்போது வரை பிரச்சினயாக உள்ளது. மூன்று வருடமாக தேர்தல் நடத்த முயற்சித்து வருகிறேன். துரைசாமி என்பவர் மற்றவர் மாதிரி அழகாக போலி கையெழுத்து போடக்கூடியவர். அவரால்தான் பல பிரச்னைகள் ” என்றார். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *