ராஜஸ்ரீ, நிரோஷா, ஆதவன், ரோபோ சங்கர், சங்கிலி முருகன், மதுமிதா.சாண்டி ஆகியோரும் நடிக்க
பி எஸ் விஜய் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் க க க போ . கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க என்பதன் சுருக்கம்தான் இந்தப் பெயராம் .
அப்படிப் பார்த்தாலும் க க கா போ என்று தான் வரவேண்டும் . ஆனால் கா என்ற எழுத்தின் துணைக்கால் எழுத்தை அடைப்புக் குறிக்குள் போட்டு அதை க என்ற குறில் ஆக்கி சுருக்கப் பெயருக்கு நியாயம் செய்கிறார்கள் .
தவிர படத்தின் விளம்பரத்தில் நிஜ க க க போ என்று ஒரு வாக்கியமும் வைத்து இருக்கிறார்கள்
இந்த க.க.க.போ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடல்களை அன்பு பிக்சர்ஸ் அதிபரும் ஐயப்பனை சினிமா விநியோகத் துறைக்குக் கொண்டு வந்தவரும் திமுக சட்ட மன்ற உறுப்பினருமான,
ஜெ. அன்பழகன் வெளியிட, க.க.க.போ படத்தின் தயாரிப்பாளர் செல்வி சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்
படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன நகைச்சுவையை நோக்கமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டு இருப்பது தெரிந்தது
வரவேற்புரையற்றிய தயாரிப்பாளர் டாக்டர் செல்வி சங்கர்
” மலேசியாவில் இருந்து வந்து இந்தப் படத்தை நாங்கள் எடுத்த போது,
எங்களுக்கு இங்குள்ள எல்லாக் கலைஞர்களும் கொடுத்த ஒத்துழைப்பும் காட்டிய அன்பும் மறக்க முடியாதது. அடுத்தடுத்து படம் எடுக்க வேண்டும் என்ற எங்களுக்கு அது ஏற்படுத்தி உள்ளது ” என்றார்
சுப்பு பஞ்சு பேசும்போது
” இந்தப் படத்தில் பெண் வேடத்தில் நடித்து இருக்கும் நான், அதற்காக தாடி மீசை மட்டுமல்லாது கண் புருவத்தையும் வழித்துக் கொண்டு ஒரு வாரமாக வெளியே செல்ல முடியாமல் தவித்தேன்.
ஆனாலும் வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் இதை ஏற்று நடித்தேன். படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ” என்றார் .
நகைச்சுவையாகப் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன் “படத்தில் எனக்கு வரும் ஒரு பாடல் காட்சி, எனது நிஜ கேரக்டரையே சொல்லும் விதமாக இருந்தது.
தவிர இந்த படத்தில் நான் நடித்த காட்சிகளும் கோர்ட்டை மையப்படுத்தியே அமைந்தது,
உண்மையில் என் நிஜ வாழ்க்கைக்கும் கோர்ட்டுக்கும் சம்மந்தம் உண்டு என்பது எல்லாருக்கும் தெரியுமே. , அதே போல் மூன்று பெண்களுக்கு கணவனாக என்னை நடிக்க வைத்ததன் மூலம்
இந்தப் படத்தை என் நிஜ வாழ்க்கையோடு நெருக்கமாக சம்மந்தபடுத்தி விட்டார் இயக்குனர் ” என்று கலகலக்க வைத்தார் . (கருத்துக்களை கச்சிதமாக கவ்விக் கொண்டீர்கள் போங்கள் !)
படத்தின் இயக்குனர் பி எஸ் விஜய் தனது பேச்சில் ” முதல் படத்திலேயே நிறைய முன்னணி நட்சத்திரங்களை வைத்து படமாக்கி இருக்கிறேன்.
அவர்கள் அனைவரும் என்னை புதுமுக இயக்குனர் என்று பார்க்காமல் அன்பாக நடந்துகொண்டார்கள்
படத்தை தயாரித்த செல்வி சங்கர் மற்றும் சங்கர் இருவருக்கும் மிகவும் நன்றி கதாநாயகி எனக்கு ஓர் இணை இயக்குனர் போல் பணியாற்றினார் .
படத்தை வெளியீடும் தேவர் பிக்சர்ஸ். என் போன்ற புதுமுக இயக்குனருக்கு உதவி செய்வதற்கு மிகவும் நன்றி ” என்றார்
தயாரிப்பாளர் டாக்டர் சங்கர் பேசும்போது
“நான் மலேசியாவில் இருந்து வந்த தமிழன் என்றுதான் பலருக்கும் தெரியும் ஆனால் உண்மையில் நான் திருநெல்வேலியில் இருந்து மலேசியா சென்ற தமிழன்தான்.
மலேசியாவில் பெரிய அளவில் முறுக்கு வியாபாரம் செய்கிறோம் . அதை இங்கேயும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது .
என்னை இப்படத்திற்கு கொண்டுவந்தவர் இயக்குனர் விஜய்தான். உண்மையில் இந்தப் படத்தை தயாரிக்க ஆரம்பித்தது வேறொருவர்.
கொஞ்சம் படம் எடுக்கப்பட்டு தயாரிப்பாளரால் தொடர் முடியாத நிலையில் என்னிடம் வந்தார் இயக்குனர் . கதை கேட்டதும் என் மனைவிக்கு மிகவும் பிடித்து இருந்தது
எனவே இந்தப் படத்தை என் மனைவி செல்விக்காக தயாரித்தேன். இதுபோன்று தமிழில் நிறைய திரைப்படங்களைத் தயாரிக்க இருக்கிறேன் .
ஒரு தயாரிப்பாளன் என்ற முறையில் இயக்குனருக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தேன் . அவரும் இப்படத்தை நன்றாக முடித்துக் கொடுத்தார்.
கேசவன்
படத்தின் ஹீரோ கேசவன் இப்போது உயிரோடு இல்லை . ஒரு விபத்தில் இறந்து விட்டார் . அவர் இல்லாதது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது
மலேசியாவிலும் இந்தப் படத்தை எடுத்து இருக்கிறோம் . படத்தை வாங்கி வெளியீடும் தேவர் பிக்சர்ஸ் குழுமத்திற்கு மிகவும் நன்றி.
இந்த விழாவுக்கு அன்பழகன் வந்து பாடல்களை வெளியிட்டுக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி ” என்றார் .
தேவர் பிக்சர்ஸ் பாரதி ஐயப்பன் பேசியபோது
“என் அப்பா ஐயப்பன் அவர்களுக்கு எல்லா விதமாகவும் துணையாக இருந்தவர் அன்பழகன் அவர்கள்.
இன்று என் அப்பா இல்லாத நிலையில்,
ஐயப்பன்
அந்த தந்தை ஸ்தானத்தில் அன்பழகன் அப்பாவை வைத்துப் பார்க்கிறேன் .
அவர் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும்” என்றார்
ஜே. அன்பழகன் தன் பேச்சில்
” இது போன்று சிறிய படங்கள் நிறைய வரவேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்.
இப்போது சிறுபடங்கள் பெரிய படங்கள் என பாராபட்சம் பார்க்காமல் படங்கள் வெளீயிடுவதில் பிரச்சனை வருகிறது
மறைந்த ஐயப்பன் அவர்கள் எனக்கு மிகவும் நெருங்கிய நீண்டகால நண்பர்.
விஜய் நடித்த தலைவா திரைப்படத்தை வெளியீட கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது, அதனால் மனமுடைந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் போகவே ,
அதைக் கண்டு வருத்தமுற்ற நான் அதை வாங்கி வெளியிடுகிறேன் என்று அறிவித்தேன்
இரவோடு இரவாக அய்யப்பன் 400 திரையங்குகளை புக் செய்தார். அதன் பின்னரே படம் வெளியானது .
இதுமட்டுமின்றி நிறைய சின்ன படங்களை வாழ வைத்த ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது அவரது மகன் பாரதி அய்யப்பன் சார்பாக மீண்டும் துவங்கபட்டு ,
மீண்டும் சிறிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது , அவரது தந்தைக்கு என் பூரண ஆசிகள் இருந்தது போன்று இவருக்கும் என் ஆசியும் எப்போதும் உண்டு
படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் தயாரிப்பாளர்கள் செல்வி சங்கர், சங்கர் அவர்களுக்கும், வாழ்த்துகள் ” என்றார்
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462