விஷால் , கார்த்தி நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா ‘

karuppu 3
பிரபு தேவா ஸ்டுடியோஸ் சார்பில் ஐசரி கணேஷ் , பிரபு தேவா தயாரிக்க,  பிரபுதேவா தமன்னா நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கிய தேவி படத்தை அடுத்து , இப்போது மீண்டும் அதேநிறுவனத்தில் தயாரிப்பில் , விஷால், கார்த்தி , வனமகன் பட நாயகி சாயிஷா ஆகியோர் நடிக்க பிரபு தேவா இயக்கும் புதுப்படம் கருப்பு ராஜா வெள்ளை ராஜா .

karuppu 2

படத்தின் அறிமுக விழாவில் சம்மந்தப்பட்ட அனைவரும்  கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் பேசிய  தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் “தேவி படத்தின் வெற்றியை அடுத்து நாங்கள் உருவாக்கும் படம் இது . மறைந்த இயக்குனர் கே.சுபாஷ் எழுதிய கதை இது .

karuppu 4
இரண்டு ஹீரோக்கள் நடிக்க பொருத்தமான கதை . இயக்குவது பிரபு தேவா . நல்ல படமாக வரும் என்பதில் ஐயமே இல்லை ” என்றார் . இயக்குனர் ஏ எல் விஜய் பேசும்போது ” இந்த நிறுவனம் என் குடும்ப நிறுவனம் போல . இங்கே மிகச் சிறந்த தயாரிப்பாளர்கள் , நடிகர்கள் , இயக்குனர் ஆகியோர் கூடி உருவாக்கும் படம் இது .

karuppu 5

நான் இயக்கிய வன மகன் படத்தில் அவர்தான் கதாநாயகி . அவர் மிகச் சிறந்த டான்சர் . வன மகன் படத்தில் அற்புதமாக ஆடி இருக்கிறார் ” என்றார்.

 சாயிஷா தன் பேச்சில் ” வணமகன் படம் எனக்கு மிக சிறந்த அனுபவம் .

karuppu 6

இந்தப் படம் இன்னும் நல்ல வாய்ப்பு .  இயக்குனருக்கும் தயாரிப்பளருக்கும் நன்றி ” என்றார்

ஹீரோகளில் ஒருவரான கார்த்தி ” இயக்குனர் கே. சுபாஷ் எழுதிய அருமையான கதை இது . விஷால் மீது ரொம்ப அன்பு கொண்டவர் அவர் .

karuppu 7

‘நீ ஹீரோவாக வேண்டும் ‘என்று எண்ணத்தை விஷாலிடம் முதன் முதலில் சொன்னவர் அவர்தான் . படம் நன்றாக வரும் என்பது புரிகிறது ” என்றார் .

விஷால் பேசும்போது ”  ஒரு ஹீரோவுக்கு திருப்தியான கதை சொல்வதே பெரிய விஷயம் . ஆனால் சுபாஷ் சார் இரண்டு ஹீரோவுக்கும் திருப்தி வரும் வகையில் இந்த கதையை உருவாக்கி உள்ளார் .

karuppu 9

அன்பு , வன்முறை இரண்டுக்குமான போராட்டமே இந்தக் கதை

சாயிஷா பிரம்மாதமான  டான்சர் . எனக்கு அதனால் பிரச்னை இல்லை. ஆனால் கார்த்தி செத்தான் . ஏன்னா அவனுக்கு சாயிஷா கூட பாட்டு இருக்கு .

karuppu 99

நானும் கார்த்தியும் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ஆளுக்கு ஐந்து கோடி கொடுக்க உள்ளோம் . அதில் ஒரு பகுதியை இந்தப் படத்தின் சம்பளத்தில் கொடுப்போம் ” என்றார்

இறுதியாகப் பேசிய பிரபு தேவா ” சாயிஷாவின் நடனத் திறமை என்னையே மிகவும் கவர்ந்த ஒன்று . இந்தப் படத்திலும் அது தொடரும் .

karuppu 8

ஒரு நல்ல வணிக ரீதியிலான வெற்றிப் படமாக கருப்பு ராஜா வெள்ளை ராஜா வரும் ” என்றார்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *