வித்தியாசமான சிலம்பச் சண்டையில் வீரம் சொல்லும் ‘முத்து ராமலிங்கம்’

muthu-5

குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டி . விஜய் பிரகாஷ் தயாரிக்க,  கவுதம் கார்த்திக், பிரியா மேனன், நெப்போலியன்  , வம்சி கிருஷ்ணா, விவேக், சுமன் நடிப்பில் 

கதை திரைக்கதை  வசனம் எழுதி ராஜதுரை இயக்கும் படம் முத்துராமலிங்கம் .  பேரே சொல்லும் இது தென் மாவட்ட வாழ்க்கைப் பின்னணியில் அமைந்த படம் என்பதை ! 
அது மட்டுமல்ல … படத்தின் மிக முக்கியமான விஷயம் சிலம்புச் சண்டை . அதுவும் சாதாரண சிலம்புச் சண்டை அல்ல …  பின்னே ? இயக்குனர் ராஜ துரையே சொல்லட்டும் 
muthu-8
” முதலில் கதை பற்றி சொன்னால்தான் அது புரியும் ” என்று ஆரம்பிக்கிறார் ராஜ துரை.  ” இந்த மண்ணில் வளரும் தலைமுறைகளிடம்,
 என்றும் வீர உணர்ச்சியை வளர்ப்பதற்காக சிலம்பம் கற்றுத் தரும் பணியை மேற்கொள்ளும்,  மூக்கையா தேவரின் மகன் முத்துராமலிங்கம் . 
திருநெல்வேலியில் நடக்கும் ஒரு சிலம்பப் போட்டியில் நாயகனின் குழுவுக்கும்  இன்னொரு குழுவுக்கும் மோதல் ஏற்படுகிறது .  
muthu-9
அந்த குழுவினர் செய்த புகாரின் அடிப்படையில் முத்துராமலிங்கத்தை கைது செய்ய வருகிறார் ஒரு காவல்துறை அதிகாரி .
அந்த அதிகரிக்கும்  மூக்கையா தேவருக்கும் மோதல் ஏற்பட ,  மூக்கையா , முத்துராமலிங்கம்  இருவரும் தலைமறைவாகிறார்கள் . 
ஒரு தனிப்படை அமைத்து இருவரையும் கைது செய்ய அந்த  காவல் துறை அதிகாரி முயல , அவரிடம் கதாநாயகி ” முடிந்தால் முத்து ராமலிங்கத்தை சிலம்பத்தில் வென்று அப்புறம் கைது செய்யுங்கள் ‘ என்கிறாள் . 
muthu-6
சிலம்பம் என்றால் சாதாரண சிலம்பம் இல்லை .  மதுரை, திருநெல்வேலி ,, கன்னியாகுமரி , திருவனந்தபுரம், சோட்டானிக்கரை போன்ற பகுதிகளில்
இன்றும் புழக்கத்தில் இருக்கிற  — சிலம்பக் குச்சி  முனையில்   கத்தி கட்டி விளையாடும் – ஆபத்தான சிலம்பம் . 
அந்த காவல் துறை அதிகாரி தமிழ்நாடு போலீசில்  சிலம்பம்  தெரிந்த அனைவரையும் வென்று ,
பிறகு ஆபத்தான் சிலம்பமும் கற்று  நாயகனுடன்  மோதுகிறார் . நடந்தது என்ன என்பதுதான் படம் ” என்று கதை சொல்கிறார் . இயக்குனர் . 
muthu-4
படத்துக்கு எல்லா பாடல்களையும் எழுதியவர் மறைந்த பஞ்சு அருனாச்சலம்.  தவிர படத்தில் கமல் ஒரு பாடலும் பாடி இருக்கிறார் . 
அது பற்றி கூறும் இயக்குனர் ” இந்தப் படத்துக்கு  இசை அமைக்க இசைஞானி இளையராஜாவை விட்டால் ஆள் இல்லை என்தாபல் அவரிடமே போனேன் .
 கதை சொன்னேன். தேவர் மகன் என்ற பெயரை  விட இது சிறந்த  பெயர் என்றார் இளையராஜா . 
muthu-2
கம்போசிங்கின் போது முரட்டுக்  காளை படத்தில் வரும் ‘பொதுவாக என் மனசு தங்கம் போல ஒரு பாடல்  வேண்டும் என்றேன்.  அந்தப் பாடலை எழுதிய பஞ்சு அருணாச்சலம் சாரையே எழுத வைப்போம் என்றார் .
பஞ்சு சாரே வந்து பாடல்களை   எழுதினார் . அறிமுகப் பாடலை  யாரை பாட வைக்கலாம் என்று யோசித்த இளையராஜா கமல் சாரை பாட வைக்கலாம் என்றார் . கமல் சார் வந்தார் . பாடிக் கொடுத்து  விட்டுப் போனார் .
” பக்கா நாட்டுப் புறக் கதைக்கு கவுதம் கார்த்திக்  ஹீரோவாக செட் ஆவாரா ?” 
muthu-99
“அவரை பபுதிய தோற்றத்தில் இந்த படத்தில் கொண்டு வர முடிவு செய்தே அவரை ஒப்பந்தம் செய்தேன் . அவரும் பொருத்தமாக  மாறி இருக்கிறார் . படத்துக்காக நாற்பது நாட்கள் சிலம்பம் கற்றுக் கொண்டார் . 
மூக்கையா தேவர் கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் பிரபு சாரை ஒப்பந்தம் செய்தேன் . இந்த நிலையில் தன் மகன் கவுதம் நடிக்கும் படம் என்பதால்,  
இதன் கதையை கேட்ட நவரச நாயகன் கார்த்திக் , ‘ நான்தான் மூக்கையா தேவராக  நடிப்பேன்’ என்றார்.  . பிரபு சாரிடம்  தர்ம சங்கடத்தை சொன்னோம் . அவரும் விட்டுக் கொடுத்தார் . 
muthu-3
ஆனால் ஷூட்டிங் சமயத்தில் கார்த்திக் சாருக்கு  உடம்பு சரி இல்லாமல் போனதால் நெப்போலியனை நடிக்க வைத்தோம் ” என்கிறார் .
படத்தின் தயாரிப்பாளர் விஜய் பிரகாஷ் ” இது எனக்கு முதல் படம் . . படத்தில் நடிகர்களும் அதிகம் .   தவிர எல்லா காட்சிகளிலும்
 துணை நடிகர்கள் அதிகம் இயக்குனர் கேட்ட எல்லா நடிக நடிகையரையும் ஒப்பந்தம் செய்து கொடுத்தேன் . 
படத்தில் கவுதம் கார்த்திக் பிரியா  ஆனந்த் ஜோடிப் பொருத்தம்,  நெருக்கம் எல்லாம் பிரம்மாதமாக வந்துள்ளது . 
muthu-4
தவிர பிரியா ஆனந்த் , கிணற்றை தாண்டுவது, முதல் மாடியில் இருந்து குதிப்பது , போன்ற காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் . சிலம்பச்  சண்டையும் போடுகிறார் .  ” என்றார் . 
படத்தின் பாடல்களை இசை ஞானி இளையராஜா வெளியிட ,  சகலகலா வல்லவன் டி. ராஜேந்தர் பெற்றுக் கொள்ள .. அப்படி ஒரு முயற்சியில் இருக்கிறது படக் குழு . 
விரைவில் பாடல்கள் வெளியீடு . வாழ்த்துகள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *