
காதல் என்பது அடைக்கலமாவது அடிமையாவதல்ல…அதற்கேற்ப தன்னை உணர்ந்த ஒருவன் எப்படி காதலி(யி)டம் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்காமல் சுயமரியாதையோடு செயல்படுகிறான் என்ற அடிப்படைக் கதையோடு…
மனித உணர்வுகளின் கறுப்புப் பக்கங்களை அதன் அர்த்தம் விலகாமல் பேசும் படம்தான், நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து இயக்கும் நதிகள் நனைவதில்லை .
படத்தின் நாயகிகளாக மோனிகாவும் ரிச்சாவும் நடிக்க, பாலாசிங், செந்தில், நெல்லை சிவா, குண்டு கல்யாணம் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தில் அறிமிகமாகும் நாயகன் பிரணவ் படத்தின் மூன்று சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து கிட்டத்தட்ட ரத்தக் குளியலே நடத்தி விட்டாராம் . (புகைப்படங்களில் நீங்கள் பார்ப்பது வேறு குளியல் )

மதுரை முத்துவும் டவுட் செந்திலும் இணைந்து கலக்கும் ரகளை காமெடியை படப்பிடிப்பிலேயே யூனிட் ஆட்கள் சிரித்துக் கொண்டாடினார்களாம்.
சவுந்தர்யனின் ஏழு இனிய பாடல்களை குமரி மாவட்டத்தின் எழிலான பகுதிகளில் கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவில் படமாக்கி இருக்கும் இந்த நதிகள் நனைவதில்லை படம் செப்டம்பரில் திரையரங்குகளை நனைக்க இருக்கிறது .
வசூல் வெள்ளம் வரட்டும் !