அக்ஷயா பிக்சர்ஸ் ராஜன் தயாரிக்க, சத்யமூர்த்தி, விஜயகுமார், கோபி அரவிந்த், சுதாகர் ஜெயராமன், முனீஸ் காந்த், ஜார்ஜ் மரியான், நடிப்பில் ரமேஷ் வெங்கட் இயக்கி இருக்கும் படம்.
ஒரு திரையரங்கில் ஆபாசப் படம் பார்க்க இளைஞர்கள் , சிலர், இளம் பெண்கள் சிலர், ஒரு கள்ளக் காதல் ஜோடி ஆகியோர் படம் பார்க்க வருகிறார்கள் . உள்ளே ஆபாசப் படம் ஓடும்போது , சட்டென்று பேய்ப்படமாக மாறுகிறது . அரங்குக்குள் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.
படம் பார்க்க உள்ளே போன யாரும் வெளியே வர முடியவில்லை. அங்கே சில பேய்கள் மிரட்டுகிறது . ஏன் என்பதற்கு ஒரு தயாரிப்பாளர், தான் எடுத்த பேய்ப்படத்தை பரபரப்பாக விளம்பரப்படுத்த செய்த செயலின் விபரீத முடிவே காரணம் என்பது தெரிய வர,
அப்புறம் என்ன என்பதே படம் .
ஒரு பழைய திரையரங்குக்குள் தொண்ணூறு சதவீதப் படம் .
வெளியே வர முயன்றால் மீண்டும் உள்ளேயே போவது, காலிங் பெல் அடித்து சொல்வது எல்லாம் நடப்பது போன்ற ஒரு சில விஷயங்கள் கவனிக்க வைக்கிறது .
காரணம் என்று அவர்கள் சொல்லும் கதை பக்குவமின்மை .
காட்சியமைப்புகள் சவ சவ .
எனினும் சத்தம் போட்டு மிரட்டப் பார்க்கிறார்கள்.