யஷ்ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்ய சோப்ரா தயாரிக்க, ஷாருக் கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம், டிம்பிள் கபாடியா, சல்மான் கான் நடிப்பில் ஸ்ரீதர் ராகவன் திரைக்கதையில் சித்தார்த் ஆனந்த் எழுதி இயக்கி இருக்கும் படம்.
இந்திய உளவுத் துறைக்காக பணியாற்றிய ஒரு அதிகாரியை ( ஜான் ஆபிரகாம்) ஒரு நிலையில், அவனுக்கு உதவினால் பெரும் பிரச்னை வரும் என்ற நிலையில் அரசு கைவிட்டு விட, அதனால் மனைவியை இழந்த அவன் அரசாங்கம் செய்த துரோகம் தாங்காமல் உலக அளவில் பலம் பெற்று இந்திய அரசுக்கு எதிராக செயல்படுகிறான் .
அவனைப் பிடித்து அவனது திட்டங்களை அழிக்க இன்னொரு அதிகாரியை ( ஷாருக்கான்) அனுப்ப, ஒரு நிலையில் அவன் சிக்க, அவனையும் அரசு உளவுத் துறை கைவிடுகிறது . அவன் என்ன செய்தான் என்பதே படம் . நாட்டுக்காக தியாகம் செய்யும் உயர் அதிகாரியாக டிம்பிள் கபாடியா , ஹீரோவை வெட்டியும் ஒட்டியும் உறவாடும் பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ உளவு அதிகாரியாக தீபிகா படுகோனே, ஹீரோவுக்கு உதவும் ஆபத் பாந்தவ அதிகாரியாக சல்மான் கான் .
பல ஆங்கிலப் படங்களில் பார்த்த காட்சிகள் சம்பவங்களின் தொகுப்பே . ஆனால் மேக்கிங், லோக்கேஷன் , வியக்க வைக்கும் அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள், தீபிகா ‘படு’கோனேவின் கவர்ச்சிக் காட்சிகள், இசை, ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு எல்லாம் சேர்ந்து படத்தை வெற்றிகரமான மசாலா படமாக்கி விட்டன .