விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க , விஜய் ஆண்டனி இசை அமைத்துக் கதாநாயகனாக நடிக்க ,
சட்னா டைட்டஸ் நாயகியாக நடிக்க, இயக்குனர் சசி இயக்கி இருக்கும் படம் பிச்சைக்காரன் .
கே ஆர் பிலிம்ஸ் சரவணன் மற்றும் கார்த்திக் இருவரும் பிச்சைக்காரன் படத்தின் மொத்த ஏரியாவையும் வாங்கி எல்லா ஏரியாக்களையும் விற்று முடித்து விட்டனர் .
கூடவே ஸ்கைலார்க் பிலிம்ஸ் ஸ்ரீதர் வியாபாரத்தில் கை கோர்த்துள்ளார் .
படம் வரும் மார்ச் நான்காம் தேதி தமிழகத்தில் 350 மற்ற பகுதிகளில் 150 என்று உலகம் முழுக்க சுமார் 500 திரைகளில் வெளியாகிறது .
படத்துக்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் படத்தின் முன்னோட்டததையும் நெஞ்சோரத்தில் பாடலையும் திரையிட்டனர்
படத்தின் முன்னோட்டம் கமர்ஷியலாக இருக்கும் அதே நேரம் அழகியல் கவிதையாக , பொருள் பொதிந்து இருந்தது . ”பால் போடறவன் பால்காரன் . பேப்பர் போடறவன் பேப்பர்காரன். அப்போ பிச்சை போடறவன்தானே பிச்சைக்காரன் .அப்போ நம்மளை ஏன் பிச்சைக்காரன்னு சொல்றாங்க ?” என்பது உட்பட ,
பல சுவையான விஷயங்கள் படத்தில் ! அம்மா பெயர் போட்ட அரசியல் பேனரை விஜய் ஆண்டனி போர்த்திக் கொள்வதை அன்பாகவும் பார்க்கலாம் . அரசியலாகவும் பார்க்கலாம்
விஜய் ஆண்டனியின் உருவத் தோற்றம் மெருகேறி இருக்கிறது. நடிப்பும் மெருகேறி இருப்பது, மருத்துவமனையில் மனம் வலிக்க நொறுங்கிச் சரியும் ஷாட்டில் தெரிகிறது .
அறிமுக ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு மிக சிறப்பாக இருந்தது .
டூயட் பாடும் போதும் பிச்சை எடுக்கிற கான்சப்ட் அபாரம் .
நெஞ்சோரத்தில்… பாட்டு நெஞ்சின் மையத்தில் உட்காருகிறது .ஆனால் பாடல் வரிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
வரலாற்றுத் தன்மையுடன் கூடிய சிநிமாஸ்கோபிக் வடிவ எழுத்துருவில் பிச்சைக்காரன் என்று எழுதி, அதற்கு மேல் ஒரு மகுடம் சூட்டிய டைட்டில் சொல்கிறது ….
எல்லாம் இருக்கும் ராஜ வாழ்க்கை வாழும் போதும் விரும்பி பிச்சைக்காரன் ஆகும் ஒருவனின் கதை இது என்று.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் கே ஆர் பிலிம்ஸ் சரவணன் பேசும்போது,
சரவணன்
” இது நான் வாங்கி வெளியிடும் முதல் படம் . இது முழுக்க முழுக்க விஜய் ஆண்டனி பாணி கமர்ஷியம் படம் .
நான், சலீம் படங்களில் காதலையும் ஆக்ஷனையும் விஜய் ஆண்டனி சிறப்பாக கையாண்டு இருந்தார் . இந்தியா பாகிஸ்தான் காமெடி . இந்தப் படத்தில் ஆக்ஷன் , காதல் , காமெடி எல்லாம் இருக்கிறது .
அது இயக்குனர் சசியின் பாணியில் மெருகேறி சிறப்பாக வந்துள்ளது ” என்றார் .
இயக்குனர் சசி பேசும்போது ” படத்தைப் பொறுத்தவரை எடுக்க நினைத்ததை சரியாக எடுத்தேன் . எல்லோருக்கும் பிடித்து இருந்தது . எனினும் அண்மையில் எனக்கு கொஞ்சம் பதட்டம் .
ஏனென்றால் எனது படத்தை நம்பி விலை கொடுத்து வாங்கிய கே ஆர் பிலிம்ஸ் மற்றும் ஸ்கை லார்க நண்பர்கள் படம் பார்க்க இருந்த நாள் அது . படத்தைப் பார்த்தார்கள் . மறுநாள் அவர்கள் ஆபிசுக்கு போனேன் .
என்னை கார்த்திக் மிகுந்த உற்சாகமாக வரவேற்றார். முன்னை விடவும் உற்சாக வரவேற்பு . அப்போதுதான் எனக்கு நிம்மதி .
படத்தை வாங்கிய எல்லாருக்கும் பிடித்தது போலவே டிக்கட் வங்கி பார்க்க வரும் எல்லோருக்கும் படம் பிடிக்கும் .
இது பிச்சைக்காரர்களைப் பற்றிய படம் அல்ல . சூழல் காரணமாக பிச்சைக்காரன் ஆகும் ஒரு பணக்காரனைப் பற்றிய கதை . இதற்கு பிச்சைக்காரன் என்பதை விட பொருத்தமான டைட்டிலே இல்லை .
வேறு யாராலும் முடியாத அளவுக்கு மிகப் பிரம்மாதமாக இந்தப் படத்தை சரவணன் மக்களிடம் கொண்டு போகிறார் ” என்றார்
விஜய் ஆண்டனி பேசும்போது ” என்னை இசை அமைப்பாளரா அறிமுகப்படுத்தியதே சசி சார்தான், டிஷ்யூம் படத்துல ! அவரோட படம் பண்ணனும்னு என் ஆசையை தெரிவித்தேன் .
அவர் சொன்ன கதை கேட்டு முடித்ததும் அடக்க முடியாமல் குமுறி குமுறி அழுது விட்டேன்.
இந்தப் படத்தை தயாரித்து நடித்தர்ககப் பெருமைப் படுகிறேன்
இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன் . என்னை பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்கார வைத்து விட்டு தூரதத்தில் கேமராவில் இருந்து படம் பிடித்தார்கள் .
சில சமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு பணம் கொடுத்து நடிக்க வைத்தோம் . அப்போது அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டால் ரொம்ப கொடுமையாக இருந்தது .
மகனும் மருமகளும் துரத்தி விட்டதால் பிச்சை எடுக்க வந்த பெண்மணி, பிச்சை எடுத்து மகளை படிக்க வைக்கும் அப்பா ; அந்தக் குடும்பத்துக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார் .. இப்படி பல நிகழ்வுகள் …
நாம் அவர்களை மிக சுலபமாக கைகால் இருக்கே உழைக்க வேண்டியதுதானே என்று திட்டுகிறோம் அல்லது புறக்கணித்து விட்டுப் போகிறோம்
ஆனால் இன்னொரு வகையில் வாழ்வில் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தான் . பிச்சையாக என்ன கேட்கிறோம் என்பது மட்டுமே மாறுகிறது .
நான் வாய்ப்புப் பிச்சை எடுத்து இருக்கிறேன் . இப்போதும் பைனான்ஸ் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் .
இந்தப் படத்தை வாங்கிய சரவணனிடம் எல்லோரும் ‘என்ன இது.. முதன் முதலாபட விநியோகம் பண்றீங்க .. பிச்சைக்காரன் என்ற படத்தை வாங்கறீங்க?’ன்னு கேட்டு இருப்பா ங்க .
ஆனா அவர் படத்தை நம்பி வாங்கினர் . எமன் படத்தை அடுத்து நான் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கும் வாய்ப்புக் கூட அவருக்கு அமைய வாய்ப்பு உண்டு .
என் மனைவி பாத்திமா தரும் நம்பிக்கை அவங்க இல்லன்னா நான் இல்ல .
இது எல்லோருக்கும் பிடிக்கிற படமா வந்திருக்கு . நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ” என்றார்
வாழ்த்துகள் , பிச்சைக்காரனாக நடித்திருக்கும் சினிமா இச்சைக்காரனுக்கு !
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462