கிராமத்துப் பின்னணியில் காதல் , பாசம், கும்மாங்குத்து குத்தாட்டம் என்று உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் செங்குட்டுவனின் தந்தையாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஆடுகளம் நரேன் .
ராதாபாரதியின் இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆன ஷர்மிளா, அதே ராதா பாரதி இயக்கும் இந்தப் படத்தில் அம்மாவாக நடிக்கிறார் .
இந்தப் படத்தை ரிலீஸ் செய்பவர் பத்திரிகை தொடர்பாளரும் இயக்குனரும் விஜய் நடிக்கும் புலி படத்தின் தயாரிப்பாளருமான பி.டி செல்வகுமார் .
பி.டி.செல்வகுமாரின் அழைப்பின் பெயரில் பாடல் வெளியீட்டு விழாவில் பேரரசு , எஸ் ஜெ சூர்யா இருவரும் கலந்து கொண்டனர் .
அதோடு படத்தின் நாயகன் செங்குட்டுவன் படத்தில் உற்சாகமாக நடனம் ஆடி இருப்பதையும் அவரது தோற்றத்தில் நேட்டிவிட்டி சிறப்பாக இருப்பதையும் பாராட்டினர் .
படத்தில் நடித்தவர்கள் இயக்குனர் ராதா பாரதி மீண்டும் படம் இயக்குவதையும் தயாரிப்பாளர் மாதையனின் எளிய குணத்தையும் பாராட்டினார்கள் .
நிகழ்ச்சியில் பேசிய செல்வகுமார் ” இளைய தளபதி நடிக்கும் படத்துக்கு கதை முடிவானதும் சில டைட்டில்களை எழுதிக் கொடுத்தோம் . அதில் புலி என்ற டைட்டிலை உடனே டிக் அடித்தார் விஜய் . ஆனால் அந்த டைட்டில் எஸ் ஜே சூர்யாவிடம் இருந்தது . நான் சூர்யாவை அணுகி டைட்டிலை கேட்டதும் உடனே கொடுத்தார் எஸ் ஜே சூர்யா. அதற்கு ஏதாவது சன்மானம் வேண்டுமா என்று கேட்ட போது மறுத்து விட்டார் ” என்றார் .
பின்னாடி ஒரு படம் கேட்டுக்குங்க சூர்யா .