மங்கி கிரியேட்டிவ் லேப் பிரைவேட் லிமிடெட் சார்பில் ராம கிருஷ்ணன் தயாரிக்க, லக்ஷ்மி ராம கிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குனர் ஏ எல் விஜய் இணை தயாரிப்பாளராக இணைய, சமுத்திரக்கனி, அபிராமி நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் ஆர் யூ ஓகே பேபி ? படத்தில் முல்லை அரசி என்பவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, கவுரவத் தோற்றத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார்.
பொது சமூகம் அங்கீகரிக்கும் விதத்துக்கு அப்பாற்பட்டு குழந்தைக்கு தாயாகும் ஒரு சிற்றிளம் பெண்ணை இந்த சமூகமும் சட்டமும் ஊடகங்களும் எப்படிப் பார்க்கின்றன என்பதே இந்தப் படம் என்கிறார் லக்ஷ்மி
ஏ எல் விஜய் எப்படி இந்தப் படத்துக்குள் வந்தார்?
“லக்ஷ்மி ராம கிருஷ்ணன் என்னிடம் கதை சொன்னார் . எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. எனவே ந தரப்பில் உதவிகள் செய்து அதந வழியே உள்ளே வந்தேன் என்கிறார் விஜய் . லக்ஷ்மி ராம கிருஷ்ணன் தமிழில் முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமானது ஏ எல் விஜய் இயக்கிய பொய் சொல்லப் போறோம் படத்தில்தான்.
படத்தில் சொல்வதெல்லாம் உண்மை போல ஒரு நிகழ்ச்சியை லக்ஷ்மி ராம கிருஷ்ணன் நடத்துவது போலவும் அதில் அவர் நிகழ்ச்சி இயக்குனரால் அவமானப்படுத்துவது போலவும் காட்சிகள் இருப்பது, அவர் திரையிட்டுக் காட்டிய டீசர் மூலம் தெரிகிறது.
படம் பற்றி உற்சாகமாகப் பேசிய லக்ஷ்மி ராம கிருஷ்ணன், ” கதையை நான் அனுப்பிப் படித்த உடன் சமுத்திரக்கனி ஒகே சொன்னார். அபிராமி எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகை . நான் முன்பே இயக்கிய ஒரு படத்தில் அபிராமி நடிக்க வேண்டியதுது. ஆனால் இந்தப் படத்தில்தான் அது நிறைவேறியது . மிஷ்கின் இயக்கத்தில் நான் நடித்துள்ளேன். இப்போது என் இயக்கத்தில் அவர் நடிப்பது சந்தோஷமான ஒன்று . முல்லை அரசி அற்புதமாக நடித்துள்ளார். “என்றார் .
தயாரிப்பாளர் ராம கிருஷ்ணன் , ” படத்தின் கதையை இளையராஜா சாரிடம் சொல்லி , இசை அமைப்பு நாளில் நாங்கள் போனபோது படத்துக்கு அவரே ஒரு பாடலை எழுதி இருந்தார் . அந்த அளவுக்கு ஆர்வம் காட்டினார்” என்றார் .
தொடர்ந்து பேசிய லக்ஷ்மி ராம கிருஷ்ணன் , ” இயக்குனர் விஜய் எனக்கு செய்த உதவிகள் மோகப் பெரியது .
ஆர் யூ ஒகே பேபி என்று விஜய் சேதுபதி கேட்கும் விதம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் . எனவே தான் அவர் மூலம் டீசர் ரிலஸ் ஆனது
படத்தின் பெயரை அவர் குரலில் சொல்ல வைக்கவும் அவரிடம் கேட்க இருக்கிறோம்
படத்தின் கடைசியில் 14 நிமிடம் நீதிமன்றக் காட்சி வருகிறது . அதில் பாதிக்கப்பட்ட பெண் கேட்கும் ஒரு கேள்விதான் படத்தின் ஜீவன் . படம் விரைவில் உங்கள் பார்வைக்கு வரும் ” என்றார் .
