எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில், விஜய்யின் ஆரம்பகாலப் படங்களான செந்தூர பாண்டி, ரசிகன், தேவா , அண்மையில் மாஸ்டர் ஆகிய படங்களைத் தயாரித்த டாக்டர் எஸ். சேவியர் பிரிட்டோ
மற்றும் அவரது மகளும் அண்மையில் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தை இயக்கியவருமான சினேஹா பிரிட்டோ இருவரும் தயாரிக்க,
அறிந்தும் அறியாமலும், பட்டியல், அஜித்தின் பில்லா, தெலுங்கில் பவன் கல்யாணோடு பஞ்சா , இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவோடு ஷேர்ஷா உட்பட ஒன்பது படங்களை இயக்கி அதில் ஒரு படத்தை தயாரித்து , தவிர ஃபிங்கர் ட்ரிப்ஸ் வெப் சீரிசையும் தயாரித்த – அடுத்து சல்மான்கானை வைத்து இந்தியில் ஒரு படம் இயக்க இருக்கிற – இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் இப்போது உருவாகி இருக்கும் படம் ‘நேசிப்பாயா’.
விஷ்ணு வர்தனோடு சேர்ந்து நீலன் சேகரும் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார்
மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனும் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்க, (இவர் சினேகா பிரிட்டோவின் கணவர். இவர்கள் திருமணம் விஜய் தலைமையில் நடந்தது) இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நாயகியாக நடிக்க,
ஆர். சரத்குமார், பிரபு, குஷ்பு சுந்தர், ராஜா, கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட் மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்திப் படங்களிலும் நடித்து வரும் பிரஞ்சு நடிகையான கல்கி கோச்சலின் இந்தப் படத்தில் போர்ச்சுக்கல் நாட்டு வக்கீலாக நடிக்கிறார்.
இது ஓர் அழகான அட்வென்ச்சர் காதல் கதை
“இந்த படம் ஒரு அழகான சாகச காதல் கதையாக இருக்கும். இது காதலில் உள்ளவர்கள், காதலித்தவர்கள் மற்றும் காதலிக்கப் போகிறவர்கள் அனைவரையும் ஈர்க்கும் பல தருணங்களைக் கொண்டதாக இருக்கும்’ என்கிறார் விஷ்ணுவர்த்தன்
படத்தின் பெரும்பகுதியை போர்ச்சுகல், ஸ்பெயின், நாடுகளில் எடுத்து இருக்கிறார்கள் . படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான கேமரூன் எரிக் பிரைசன் அந்த ஊரைச் சேர்ந்தவர் . ( இன்னொருவர் ஓம் பிரகாஷ்) . அதே போல ஸ்டண்ட் மாஸ்டர் , ஃபெடெரிகோ கியூவாவும் அதே .
” உண்மையில் ஒவ்வொரு முறையும் இங்கே இருந்து இவர்களைக் கொண்டு போனால் யூனிட் உட்பட செலவு அதிகம் என்பதால் அங்கேயே உள்ளவர்களை ஒப்பந்தம் செய்தேன் . ஆனால் அது அவர்கள் ஏரியா என்பதால் வேலையும் சிறப்பாக இருந்தது . தவிர கேமரா மேன் ஆரம்பத்தில் ஸ்டன்ட் கலைஞராக இருந்தவர் . அது ரொம்ப பலமாக இருந்தது” என்கிறார் இயக்குனர்
தொடர்ந்து பேசும்போது ” எனக்கு ஆகாஷ் முரளி , ஸ்னேஹா பிரிட்டோ இருவரையும் பேசிக்கலாகவே ரொம்பப் பிடிக்கும்
ஆகாஷ் ஒரு திறமையான கலைஞர் நான் அவருக்குள்ளிருக்கும் ‘ஸ்டார்’ரைப் பார்க்கிறேன். . மேலும் அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது நடிப்புத் திறனை மெருகேற்ற நிறைய தயார் செய்துள்ளார். அவரது நடிப்பை திரையில் பார்க்கும் பார்வையாளர்கள் எனது வார்த்தைகளை ஏற்றுக் கொள்வார்கள்.
அதிதிக்கு இது பொருத்தமான கதாபாத்திரம் ” என்றார்.
இதுவரை விஷ்ணுவர்த்தன் படங்களில் இல்லாதபடி சுவையான சிறு சிறு உரையாடல்களும் படத்தில் இருக்கிறது . அது நன்றாகவே இருக்கிறது
அப்பாவின் முகம் அம்மாவின் நிறத்தில் இருக்கும் ஆகாஷ் முரளி, ” விஷ்ணுவர்த்தன் சார் இயக்கத்தில் நடிப்பது என்பது சந்தோஷமான விஷயம். அது போன்ற சிறுசிறு வசனங்கள் நடிக்கும்போது மிக சுவையாக இருந்தது. தவிர எனக்கு மிகவும் பிடித்தது ஆக்ஷன் . இந்தப் படத்தில் அதுவும் இருக்கிறது. எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் ‘ என்றார்
சினேஹா பிரிட்டோ “ விஷ்ணுவர்தன் சாருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. ஆனால் அதே நேரம் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டும் சிறப்பாக இருந்தது இந்தப் படம் ஆகாஷ் முரளிக்கு ஒரு அழகான அறிமுகமாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வரும் மாதங்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கிறது.
தொழில்நுட்பக் குழு : ஏ. ஸ்ரீகர் பிரசாத் (எடிட்டர்), சரவணன் வசந்த் (தயாரிப்பு வடிவமைப்பாளர்), பா. விஜய்-ஆதேஷ் கிருஷ்ணா (பாடல் வரிகள்), தினேஷ் (நடன அமைப்பு), தபஸ் நாயக் (ஒலி வடிவமைப்பாளர்), விஷ்ணுவர்த்தன் மனைவி அனு வர்தன் (ஆடை வடிவமைப்பாளர்).
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462