மகிழ் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிவ கணேஷ் தயாரிக்க, பிரதீப், அர்ச்சனா சிங், யுவா யுவராஜ், சுபாஷ் சிம்பு, அமரன் எம் ஜி ஆர், இன்பா , ஜனனி நடிப்பில் ஜெய் சிவ சேகர் எழுதி இயக்கி இருக்கும் படம்.
இந்தியா பாகிஸ்தான் போர். குண்டடி பட்டு உயிருக்குப் போராடும் மேஜர் பல்வீர் சிங்கை (யுவா யுவராஜ்) சுமந்தபடி காப்பற்ற ஓடுகிறான் படைவீரன் சக்திவேல் ( பிரதீப்).
மேஜர் முழிப்பதும் மயங்குவதுமாக இருக்க, அவரிடம் பேசிக் கொண்டே வருகிறான். ஒரு நிலையில் அவரைக் காப்பாற்றுவது கஷ்டம் என்று எண்ணி விட்டு ஓட, மனசாட்சியின் குரலாகத் தோன்றும் அவனது மனைவி (அர்ச்சனா சிங்) இது நியாயமா என்று கேட்கிறாள் .
மீண்டும் மேஜரிடம் போகும் படைவீரன், ‘போரில் காயம்பட்ட சக வீரனை உயிரோடு விட்டு வரக் கூடாது என்ற ராணுவ விதியைக்காட்டி மேஜரை சுட முயல்கிறான்
கண் விழிக்கும் மேஜர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு சாகிறார் .
அந்த பதட்டத்தில் ஓடும் நாயகன் கண்ணி வெடியில் கால் வைப்பதோடு, பாகிஸ்தானி படை வீரன் ஒருவனிடமும் (சுபாஷ் சிம்பு) சிக்குகிறான் . முதலில் அவனையும்
வெடியில் சிக்க வைக்க நினைக்கும் நாயகன் அப்புறம் அவன் ஏன் சாக வேண்டும் என்று எண்ணி அவனை எச்சரிக்கிறான் .
அதில் நெகிழ்ந்த பாகிஸ்தானி கண்ணி வெடியில் இருந்து நாயகனைக் காப்பாற்ற , போர் மற்றும் தேச எல்லைகளைக் கடந்து இருவருக்கும் இடையில் ஒரு நட்பு முகிழ்க்கிறது .
யாருமற்ற காட்டில் இருவரும் தங்கள் குடும்பம் பற்றி எல்லாம் பாசத்தோடு பேசிக் கொள்கிறார்கள் .
இந்த நேரத்தில் அவர்களைப் பிடிக்கும் இந்திய ராணுவ அதிகாரி , ‘பாகிஸ்தானியை நாயகனே சுட்டுக் கொல்ல வேண்டும்’ . என்று கட்டளையிடுகிறான்.
கண்ணி வெடியில் இருந்து உயிரைக் காத்த பாகிஸ்தானியை சுட்டுக் கொல்ல நாயகன் மறுக்க, நடந்தது என்னதான் படம் .
கதை என்று பார்த்தால் ஓகேதான்.தான் .
ஒவ்வொரு காட்சியிலும் இரண்டு அல்லது மூன்று பேர்களே இருப்பது , திரைக்கதையில் சில சுவாரஸ்யமான விஷயங்கள், சில இடங்களில் கவனிக்க வைக்கும் வசனங்கள் என்று சிறப்பாக உள்ளன் .
ஆனால் பெரும்பாலும் சுவாரஸ்யம் இல்லாதது, பலவீனமான மேக்கிங் , நாடகத்தனமாகப் பேசும் நடிகையர், திணிக்கப்பட்ட காட்சிகள் இவை எல்லாம் படத்தைப் பின்னோக்கி இழுக்கின்றன .
எழதத் தெரிந்தவர்களுக்கு எடுக்கத் தெரியவில்லை.
‘பேரு வச்சீங்களே ,, கொஞ்சமாச்சும் சோறு வைக்கக் கூடாதா ?” என்ற நிலையிலேயே படமாக்கல் .
போர் அடிக்கும் காட்சிகள் தவறான மாடுலேஷனில் கேப் விட்டு கேப் விட்டு பேசும் நடிக நடிகையர் என்று படம் போகிறது .
மொத்தத்தில் ராயல் சல்யூட்………ரெட் லேபிள்
