படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டத்தை திரையிட்டனர். இது ஒரு பேய்ப்படம் என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது . விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு நன்றாக இருந்தது
நிகழ்ச்சியில் பேசிய படத் தொகுப்பாளர் சத்யராஜ் ” இது ஒரு ஹாரர் படம் . ரொம்ப நல்ல சுவாரஸ்யமான் திரைக்கதை . துவக்கம் முதல் கடைசி வரை படம் ரசிகர்களை கவரும் ” என்றார்
நாயகி சஞ்சிதா ஷெட்டி பேசும்போது ” சூது கவ்வும் படம் மூலம் எனக்கு ஒரு வெளிச்சம் கிடைத்தது . பல படங்களை அடுத்து இப்போது இந்த ரம். இது மிக சுவாரஸ்யமான படம்
படப்பிடிப்பில் ரொம்ப நட்பு ரீதியாக இருந்தோம் . ஜாலியாக இருந்தது. கேரவனில் உட்கார்ந்து கொள்ளாமல் சேர் போட்டு வட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தோம் .
எல்லாவற்றுக்கும் காரணம் விவேக் சார் . ஐநூறு படங்களில் நடித்துள்ள அவரது அனுபவங்களை சொல்ல சொல்ல கேட்டது மறக்க முடியாத அனுபவம் ” என்றார் .
இயக்குனர் சாய் பரத் தன் பேச்சில் ” ஒரு கொள்ளை . அதை அடுத்து பேய் வருவது என்று இந்தப் படத்தின் கதை போகும் .
படத்தில் மிக முக்கியக் கேரக்டரில் விவேக் சார் நடித்துள்ளார் . இது வழக்கமாக அவர் செய்யும் காமெடி கேரக்டர் அல்ல
இப்போது யோசித்துப் பார்த்தால் அந்த கேரக்டர்க்கு அவரை விட்டால் ஆளே இல்லை என்பது இப்போது புரிகிறது மியா ஜார்ஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்
நரேன் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் . ஆரம்பத்தில் அவர் வில்லனாக நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை . கதையைக் கேட்ட பிறகு ஒத்துக் கொண்டார்.
தாடி வெங்கட் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதை கேட்ட போது நிறைய கேள்விகளை கேட்டது அவர்தான் . அது லாஜிக் ஓட்டைகளை அடைக்க எங்களுக்கு உதவியாக இருந்தது ” என்றார்
படத்தின் ஹீரோ ரிஷிகேஷ் பேசும்போது” வேலை இல்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த போது எனக்கு கிடைத்த நல்ல பெயர் மறக்க முடியாத ஒன்று .
அதன் பின்னர் நல்ல கதையாகப் பார்த்து நாயகனாக அறிமுகமாகக் காத்திருந்தேன் . அப்போதுதான் சாய் பரத் இந்த கதையை சொன்னார் .
கதை பிடித்துப் போக , நான் அனிருத்திடம் இசை அமைக்கக் கேட்டேன் . அனிருத் ஒத்துக் கொண்டார் . படத்துக்குள் அவர் வந்த பிறகு படத்தின் இமேஜ் ரொம்ப உயர்ந்தது .
அனிருத்துக்கு இது முதல் பேய்ப் படம் . சிறப்பான இசையை கொடுத்துள்ளார் . படம் மிக சிறப்பாக வந்துள்ளது . படம் வரும் பிப். 17 ஆம் தேதி வெளிவருகிறது ” என்றார்






