வரும் 18 ஆம் தேதி திரைக்கு வரும் சண்டக்கோழி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது. அதில் பேசிய விஷால்,
“இவ்வளவு பெரிய படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது.
படம் பார்த்து முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம் பிடிப்பார்.
கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான். சண்டக்கோழி எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம்.
இரும்புத்திரைக்கு சிறப்பான இசையை தந்து படத்துக்கு வலு சேர்த்த யுவன் ஷங்கர் ராஜா, சண்டக்கோழி 2 வுக்கும் சிறப்பான இசையை தந்துள்ளார்.
சண்டைக் கோழி முதல் பாகத்தை தயாரித்த என் சகோதரன் விக்ரமுக்கு நன்றி. சண்டக்கோழி 2 திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படமாக இருக்கும்.
வெளியீட்டு தேதியை சொல்லிவிட்டு ஒரு படமெடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம். படக் குழுவுக்கு அது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
METOO விவகாரம் பற்றி கேட்டபோது, ” நான் எப்போதும் பாலியல் சீண்டல்களுக்கு எதிரானவன்.
METOOவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து கூற வேண்டும் என்று இல்லை. ட்விட்டர் என்பது ஒரு தொழிநுட்ப வளர்ச்சி. அது மற்றும்மொரு சமூகவலைதளம்.
அங்குதான் கருத்து கூறவேண்டும் என்று இல்லை. பத்திரிகையாளர்களை சந்தித்து என்னுடைய கருத்துக்களை கூறலாம் என்று இருந்தேன்.
பாலியல் தொல்லைகள் நடப்பதற்கு முன்பே அமலா பால் புகார் செய்தது போல் எங்களிடம் புகார் செய்ய வேண்டும்.
மலேசியாவில் ஒரு நடன நிகழ்ச்சியின் ஒத்திகை நடக்கும் போது அமலா பாலிடம் தவறாக பேசிய ஒருவரை பிடித்து வைத்து,
பின்னர் என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார். நானும் கார்த்தியும் உடனே அவரை கைது செய்ய இங்கிருந்தே எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம்.
அதே போல் இதை போன்ற விஷயங்கள் நடப்பதற்கு முன்னரே எங்களை தொடர்பு கொண்டால் உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
பிரச்சனை நடந்துவிட்டது என்று புகாரளிக்க சங்கம் ஒன்றும் காவல் நிலையம் அல்ல. பாலியல் புகார்களை,