கிருஷ்ணா, மோனல் கஜ்ஜார், ம.க.ப ஆனந்த் நடிப்பில்…. யுவன் சங்கர் ராஜா இசையில்… ராஜ் மோகன் என்பவர் இயக்கிய வானவராயன் வல்லவராயன் படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் என்று வெகுநாட்களாக விளம்பரம் செய்யப்பட்டு நாளை முதல் இன்று முதல் விளம்பரம் எல்லாம் அனுப்பட்ட நிலையில் … திடீரென்று படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆக முடியாத சிக்கலில் சிக்கிக் கொண்டது .
எனவே படம் ரிலீஸ் ஆகவில்லை.
காரணம்? படம் தயாரிப்பதற்காக ஃபாஸ்ட் டிராக் கால் டாக்சி உரிமையாளர்கள் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் பட்டியல் சேகருக்கு, கொடுத்த 85 லட்ச ரூபாயை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. அண்மையில் ஃபாஸ்ட் டிராக் கால் டாக்சி உரிமையாளர் இறந்து விட்ட நிலையில் அது பற்றி யாரிடமும் ஆதாரம் இருக்காது. எனவே பணத்தை தரத் தேவையில்லை என்று நினைத்திருக்கிறது பணம் வாங்கிய தரப்பு
ஆனால் பணம் கொடுக்கல் வாங்கல் பற்றி முறைப்படி பட்டியல் போட்டு ஃபாஸ்ட் டிராக் உரிமையாளர் ஆதாரப் பூர்வமாக கணக்கு வைத்திருக்க,
தயாரிப்பாளர் தரப்பு பத்திர்க்கையாளர்கள் சிலருக்கு பத்திரிக்கையாளர் காட்சி காட்டிக் கொண்டிருந்த வேளையில் சம்மந்தப்பட்டவர்கள் லேபுக்கு சென்று லெட்டர் கொடுத்து படத்தை முடக்கி விட்டார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, படத்தை வாங்கி வெளியிடும் டாக்டர் சிவபாலனுக்கு படத்தை வெளியிட்டால் மொத்தம் இரண்டு கோடி ரூபாய் நஷ்டம் வரும் என்ற நிலைமை .
எனவே அவர் வெள்ளிக்கிழமை இரவுக்குள் எண்பத்து ஐந்து லட்ச ரூபாயை செட்டில் செய்தால் மட்டுமே சனிக்கிழமை படம் ரிலீஸ் ஆகும் என்ற நிலைமை .
ஆனால் பத்திரிக்கையாளர் காட்சியில் படம் பார்த்த பலரும் படம் ஆண்பாவம் படத்தை உல்டா அடித்து வந்திருக்கிறது என்று கூற, இரண்டு கோடி ரூபாய் நஷ்டப்பட்டு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமா என்று யோசிக்கிறாராம் டாக்டர் சிவபாலன் .
அந்த அடிப்படையில் அவர் பட விசயத்தில் இருந்து பின் வாங்கி விட்டால்,
வானவராயன் வல்லவராயன் படம் பெரும் பின்னடைவையும் நஷ்டத்தையும் சந்திக்கும் என்கிறார்கள்.
கஷ்டம்தான் !