இந்தியில் சுபாஷ் கபூர் என்பவர் எழுதி இயக்கி 2013 ஆண்டு இந்தியில் வந்த,
ஜாலி எல் எல் பி படத்தின் மறு உருவாக்கம் இது .
படம் பற்றி பேச பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு
படத்தின் டிரைலரை போட்டுக் காட்டினார்கள் . டிரைலரில் உதயநிதி சிரிக்கிறார் . ஹன்சிகா சிணுங்குகிறார்
விவேக் துடிக்கிறார் . ராதாரவி பம்முகிற்றர் . பிரகாஷ்ராஜ் வெடிக்கிறார் .
கனமான படமாக இருக்கும் போல் தெரிகிறது.
மிக இயல்பாகப் பேச ஆரம்பித்த உதயநிதி ஸ்டாலின் ” இது எனக்கு அஞ்சாவது படம். வக்கீல் கதாபாத்திரம் .
கொஞ்சம் சீரியசான கேரக்டர் எனக்கு.
ஆனால் படத்தில் காதல் காமெடி என்று எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் உண்டு.
ஒரு முக்கிய சமூக பிரச்னையை சொல்லும் படம் இது.
படத்தில் நீதிபதியாக ராதாரவி, சீனியர் வக்கீலாக பிரகாஷ் ராஜ், எனக்கு தாய்மாமனாக விவேக் என்று,
முற்றிலும் அனுபவம் மிக்க நடிகர்கள் .
‘இந்த கேரக்டரை எனக்கு தரலன்னா உதைப்பேன்” என்று செல்லமாக மிரட்டியே அந்த கேரக்டரில் நடித்தார் ராதாரவி .
கோர்ட் தொடர்பான படம் என்பதால் நீண்ட நீண்ட வசனங்கள் .
எல்லாவற்றையும் சவாலாக எடுத்து பேசி இருக்கிறேன்.படம் நன்றாக வந்திருக்கிறது ” என்றார் .
இயக்குனர் அகமது பேசும்போது ” கிராமத்தில் இருந்து நகருக்கு வரும் ஓர் இளைஞன் வக்கீலாக வாழும் வாழ்க்கை , சந்திக்கும் அனுபவங்கள் என்று போகும் கதை இது .
உதயந்திக்கு காதலியாக ஹன்சிகா மோத்வானியும் பத்திரிகையாளராக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கிறார்கள் .
ராதாரவி, பிரகாஷ் ராஜ் , விவேக் என்று சுற்றிலும் அனுபவம் மிக்க நடிகர்களோடு நடித்துள்ள நிலையில் உதயநிதியின் நடிப்பு மெருகேறி உள்ளது .
இதுவரை உதயநிதியின் நடனம் , சண்டை எல்லாம் எல்லோராலும் பாரட்டப்பப்பட்டது. இந்தப் படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அவரது நடிப்பும் பாராட்டப்படும்.
எல்லா பொழுது போக்கு அம்சங்களும் உள்ள சமூக அக்கறைப் படம் இது ” என்றார்
படத்துக்கு வசனம் எழுதி இருக்கும் அஜயன் பாலா ” ஜாலி எல் எல் பி ஒரு மெல்லிய லைன் கொண்ட கதை .
ஆனால் தமிழில் நிறைய மாற்றங்கள் செய்து திரைக்கதைக்கு கனம் ஏற்றி இருக்கிறார் இயக்குனர் .
அதற்கேற்ப வசனங்களும் எழுதி இருக்கிறேன் . ஆனால் வசனங்கள் இயல்பாக இருக்கும் ” என்றார் .
ஒளிப்பதிவாளர் மதி ” படத்தில் பாதிக்கு மேல் கோர்ட் , கோர்ட் வளாகம் என்று இடங்கும் கதை இது . அதற்கேற்ப கோர்ட்டுக்கும் படத்தில் ஒரு கதாபாத்திரமே உண்டு.
அதை சிறப்பாக உணர்த்தும் வகையில் ஒளிப்பதிவு இருக்கும் .
கலை இயக்குனர் கோர்ட்டுக்காக செட் போட்டு இருக்கிறார் .
ஒரு டிஸ்ட்ரிக்ட் கோர்ட் , ஒரு மேல் கோர்ட் என்று இரண்டு செட்கள் . பார்த்தால் செட் என்றே தெரியாது .
அவ்வளவு இயல்பாக இருக்கும். அதுவும் ஒளிப்பதிவின் மூலம் கோர்ட்டின் குனாதிசயததைக் கொண்டு வர உதவியது ” என்றார்
“படப்பிடிப்பு நடக்கும்போதே மற்றொரு அறையில் எடிட்டிங் நடக்கும் .
ஒரு காட்சி முடிந்த கொஞ்ச நேரத்தில் அந்தக் காட்சியையே போட்டுப் பார்த்து விட முடியும் ” என்று படத் தொகுப்பாளர் ஜே. வி மணி பாலாஜி சொல்ல,
“அது நடிப்பில் எனக்கு உதவியாக இருந்தது ” என்கிறார் உதயநிதி .
ஏப்ரல் 29 ஆம் தேதி திரைக்கு வருகிறது மனிதன்