நடிகர் சங்கக் கணக்கு…. பிணக்கு …மணக்கு.. ஆமணக்கு…!

IMG_4946நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச்  சந்தித்தது  தலைவர் நாசர், செயலாளர் விஷால் , பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் அணி . 

“செயல்பாட்டை  நோக்கி முன்னேறுகிறோம்” என்று ஆரம்பித்த நாசர் ” இனி எங்களை பாண்டவர் அணி என்று  சொல்ல வேண்டாம் .
IMG_4833
இனி நாங்கள் நடிகர் சங்கம்தான்  . ஒரே அமைப்புதான் ” என்றார் . 
அதையே வலியுறுத்திப் பேசினார் விஷால் . “தேர்தலுக்கு முன்தான் பாண்டவர் அணி என்பது எல்லாம் . இனி அப்படி எதுவும் இல்லை .
திரைத் துறையின்  வேறு சில சங்கங்கள் தங்கள் தேர்தலுக்கு பாண்டவர் அணி என்ற பெயரைப் பயன்படுத்திக் கொண்டு,  எங்களின் ஆதரவு இருப்பதாகச்  சொல்வதாக அறிகிறோம் .
IMG_4923
ஆனால் நாங்கள் அப்படி எந்த சினிமா சங்கத்தின் தேர்தலிலும் எந்த அணியையும் ஆதரிக்கவில்லை . காரணம் நாங்கள் மற்ற சங்கங்களின் தேர்தல் தனித் தன்மையை மதிக்கிறோம் . ” என்றார் . 
நலிந்த நடிகர்களுக்கு,  தான் அளித்துக் கொண்டிருக்கும் உதவித் தொகையை 500லிருந்து ஆயிரம்  ரூபாயாக உயர்த்தித்  தருவதாக அறிவித்தார், வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஐசரி கணேஷ் .
IMG_4927
” உதவித் தொகை தேவைப்படும் உறுப்பினர்களை சரியாகக் கண்டறியும் வேலைக்கு எங்களது அகரம் ஃபவுண்டேஷன்  தன்னார்வலர்களையும் பயன்படுத்தி,  சரியான நபர்களை இனம் கண்டு உதவும் திட்டம் வைத்து இருக்கிறேன் ” என்றார் கார்த்தி . 
எஸ் பி ஐ சினிமாஸ் ஒப்பந்தம் ரத்து என்று சரத்குமார் அறிவித்து இருப்பது பற்றி கேட்கப்பட்ட போது
IMG_4883
“அவர் சொல்லி இருக்கிறார் . இன்னும் எங்களுக்கு முழு விவரமும் வரவில்லை. வந்த பிறகு அது பற்றிப் பேசுவோம் ” என்றார்கள். 
நடிகர் சங்கக் கணக்கு விவகாரம்தான் பிணக்காக இருக்கிறது . 
IMG_4947
நடிகர் சங்கத்தில் மூன்று கோடி ரூபாய் பணம் இருப்பதாக சரத் குமார் அறிவித்தஇருந்தார் . ஆனால் நடிகர் சங்கத்தின் கணக்கு வழக்கை அறிவித்த விஷால்,
“சங்க வங்கிக் கணக்கில் 27 லட்ச ரூபாய் இருக்கிறது. வைப்புக் கணக்கில் 87 லட்ச ரூபாய் இருக்கிறது . இருக்கிற மொத்த பணமே அவ்வளவுதான் ” என்றார் . (டேல்லி ஆகுமா ?)
IMG_4912
சங்கத்தின் பெயரை தமிழ் நாடு நடிகர் சங்கம் என்று மாற்றுவது பற்றிய கேள்விக்கு ” புதிதாக தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று ஓர் அமைப்பு ஆரம்பிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை .
ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றுவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன . அது பற்றி விவாதித்து சாத்தியம் என்றால் உரிய முடிவு எடுக்கப்படும் ” என்று பதில் வந்தது.. 
IMG_4962இதற்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளன. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →