ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் திரைக்கதை, வசனம் எழுதி அருண்ராஜ் வர்மா என்ற புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் தயாரித்து வரும் சாஹசம் படத்தில், பிரஷாந்தின் ஜோடியாக ஆஸ்திரேலியா அழகி அமண்டா என்பவர் நடிக்கிறார்.
சாஹசம் படத்தின் கதை பாடல், ஆடல், அழகு ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கதை என்பதால் இளமையான, அழகான நடனமாட தெரிந்த பெண்ணை பல மாதங்களாக தேடி அமண்டாவைக் கண்டு பிடித்துள்ளார் தியாகராஜன்.
இந்தியாவைச் சேர்ந்த அம்மாவுக்கும், இங்கிலாந்து நாட்டு அப்பாவுக்கும் பிறந்த 19 வயதே நிரம்பிய அமண்டா லண்டன் நடிப்பு பள்ளியில் பட்டம் பெற்றவர். பாலே நடனத்தில் பல பரிசுகளை வென்றவர்.
“நீளமான வசனங்களை கூட நொடியில் மனப்பாடம் செய்து கொண்டு வசனத்திற்கேற்ப உச்சரிப்புடன் நடிப்பில் வெளுத்து வாங்கிவிடுகிறார் அமண்டா. அமண்டாவின் பழகும் விதம், காலம் தவறாமை, தொழில் சிரத்தை, கிரங்க வைக்கும் அழகு, மற்றும் கொஞ்சும் தமிழ் இவை எல்லாம் மொத்த பட குழுவினரையும் வியக்க வைக்கிறது” என்கிறார் தியாகராஜன் . (சரிங் சார்!)
“ஆஸ்திரேலியா அழகி அமண்டாவின் வரவு தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சி தரும். சாஹசம் படம் வெளியீட்டுக்கு பிறகு வெகுவாக பேசப்படும் கதாநாயகி ஆவார்” என்கிறார் பிரஷாந்த்
“பிரஷாந்துடன் இணைந்து சிறப்பாக உருவாகும் சாஹசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தான் செய்த பாக்கியம். ஹாலிவுட் நடிகையான நர்கிஸ் பக்ரி சாஹசம் படத்தில் ஒரே ஒரு நடனத்திற்கு மட்டும் ஒத்துக்கொண்டு பிரஷாந்துடன் நடனமாடி உள்ளார். இத்தகைய அட்டகாசமான படத்தில் நடிப்பது எனது அதிர்ஷ்டமே” என்கிறார் அமண்டா , அடமண்ட்டா !
முடிவடையும் தருவாயில் உள்ள சாஹசம் படத்தின் பாடல் காட்சிகள் மலேசியா, ஜப்பான், கொரியா நாடுகளில் படமாக்கப்பட உள்ளது .
பொண்ணும் வெளிநாடு ! மண்ணும் வெளிநாடு !