
நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு ஊடகங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி சொல்ல ஊடகவியாளலர்களைச் சந்தித்தது நாசர், விஷால் , கார்த்தி, பொன்வண்ணன் அடங்கிய நடிகர் சங்க பொறுப்பாளர்கள் குழு .
நிகழ்க்ச்சியில் பேசிய நாசர் , விஷால் , கார்த்தி பொன்வண்ணன் நால்வரும் பல்வேறு விசயங்களை கலந்து கட்டிப் பேசினார்கள் .
“நடிகர் சங்கத்துக்கு எதிராக அஜித் பெயரில் வந்த அறிக்கை உண்மை இல்லை . தனிப்பட்ட கருத்து மாறுபாடுகள் இருக்கலாம் . ஆனால் நட்சத்திர கிரிக்கெட் நடத்துவது பிச்சை எடுப்பதற்கு சமம் என்ற ரீதியில்,
அஜித் கூறியதாக சொல்லப்பட்டது தவறு . அவர் அப்படி எதுவும் கூறவில்லை.
ஆனால் நட்சத்திர கிரிக்கெட் என்ற பெயரில் நடிகரகளை அழைத்து அவமானம் செய்ததாக சிம்பு கூறி இருக்கிறார் . நடிகர் சங்க கட்டிடத்துக்காக பணம் திரட்டுவதற்கான கிரிக்கெட் போட்டி என்பது,
தனிப்பட்ட யாருடைய அமைப்பும இல்லை . அங்கு வரும் நடிக, நடிகையார் யாரும் விருந்தினர் இல்லை. அது நம்ம வீட்டு நிகழ்ச்சி . அதில் சீனியர்கள் என்ற மரியாதை இருந்ததே தவிர ,
விருந்தாளி வரவேற்பு எல்லாம் யாருக்கும் இல்லை .எனவே அவமானம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை . அப்படி எதுவும் நடக்கவும் இல்லை
உண்மையில் சரத்குமார் போன்றவர்கள் வந்திருந்தால் கூட நன்றாகவே இருந்திருக்கும்.
நட்சத்திர கிரிக்கெட் போட்டி தோல்வி அடைந்தது என்ற வாதமும் தவறானது . ரசிகர்கள் அரங்கத்துக்கு வராதது பிரச்னை இல்லை . சன் டி வி ஒளிபரப்பு மூலம் எல்லோரும் விரும்பிப் பார்த்தார்கள் .
நன்கொடை டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. எங்களுக்கு பணம் வந்தது எங்கள் நோக்கம் நிறைவேறியது.அதுதான் முக்கியம் ” என்றார்கள் .
நட்சத்திர கிரிக்கெட் மூலம் எட்டு கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது . இதை வைத்து நடிகர் சங்க கட்டிடம் எழுப்பும் வேலைகள் துவங்கப்படும் .
மேற்கொண்டு பணத்துக்கு வேறு திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் சொன்னார்கள் .
சிறப்பு !