விஷால் தயாரிப்பில் ரஜினி கமல் ?

vishal

எம் ஜி ஆரும் சிவாஜியும் பார்த்துப் பார்த்து வளர்த்த நடிகர் சங்கக் கட்டிடம் இடித்து தள்ளப்பட்டு , அங்கு புதிய கட்டிடம் கட்டும் திட்டம் ….சில பல கரன்சி கபளீகரர்களால் தள்ளிப்போக , இப்போது அந்த இடமே , காம்பவுண்டு கட்டிய பொட்டலாகக் கிடைக்கிறது .

இந்த விவகாரம் தொடர்பாக சரத்குமாருக்கு எதிராக தொடர்ந்து முஷ்டியை உயர்த்தி வந்த விஷால் அண்மையில் நடந்த நடிகர் சங்க பொதுக் குழு கூட்டத்திலும்  மீண்டும் குரல் கொடுத்தார்

ராதாரவியும் நிலா அபகரிப்பு வழக்கில் ஜாமீன் வாங்கி இருக்கும்  வாகை சந்திர சேகரும்பாலையாவுக்கு விழா எடுக்க வேண்டும் . எஸ் எஸ் ஆருக்கு விழா எடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தபோது , சட்டென்று மைக்கைப் பிடித்த விஷால்

vizhal

” நான் நடிகர் சங்கத் தலைவராக வர ஆசைப்படவில்லை. நான் யாருக்கும் போட்டியும் இல்லை. ஆனால் நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட இன்னும்  மூன்று மாதத்தில் பூஜை போட வேண்டும்.அடுத்த வருடம் சொந்த கட்டிடத்தில் இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டும்  இல்லையென்றால் மீண்டும் நான் எதிர்ப்புக் குரல் கொடுக்க தயங்க மாட்டேன் .

கட்டிடம் கட்டும் நிதிக்காக நான்,  ஆர்யா,கார்த்தி போன்றவர்கள் இலவசமாகவே ஒரு படம் நடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறோம் . அதன் லாபம் அப்படியே சங்கக் கட்டிடம் கட்டும் பணிக்கு போகும். எங்களை தவிர மற்ற எல்லா நடிகர்களும் அந்தப் படத்தில் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன் . அப்படி நடந்தால் இன்னும் அது நல்ல லாபம் காணும் முயற்சியாக மாறி நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு பயன்படும் ” என்று கூறி இருக்கிறார் .

அந்தப் படத்தில் எல்லா நடிகர்களையும் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது . குறிப்பாக நீண்ட இடைவேளைக்கு பிறகு கமலும் ரஜினியும் சேர்ந்து நடிக்கும் படமாக அது அமைய வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.

சேர்ந்து நடிப்பார்களா? இல்லை தனித்தனி காட்சிகளில் தோன்றுவார்களா ? இல்லை ஜஸ்ட் தலையைக் காட்டுவார்களா . இல்லை ……

– என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →